வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவில் அருகில் சுற்றித்திரியும் இடைத்தரகர்களை கோவில் நிர்வாகம் போலீஸ் உதவியுடன் பிடித்து உதைக்கவேண்டும்.
திருப்பதி: 'ஸ்ரீவாரி தரிசனம், ஆர்ஜித சேவைகள், தங்குமிட வசதி தொடர்பான விஷயங்களில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என, பக்தர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. ஆந்திராவின் திருப்பதியில் உள்ள திருமலையில் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி தரிசனம் மற்றும் தங்குமிடம் தொடர்பான அறிவிப்பை மாதந்தோறும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. இருப்பினும் , தரிசனம் மற்றும் தங்குமிடம் தொடர்பாக பக்தர்களை பலர் ஏமாற்றி பணமோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று கூறியதாவது: ஆர்ஜித சேவை, ஸ்ரீவாரி தரிசனம் தொடர்பாக எங்களின் பிரத்யேக இணையதள பக்கத்தில் மாதந்தோறும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. திருப்பதி தேவஸ்தான செயலி வாயிலாகவும், தரிசனத்துக்கும், தங்குவதற்கும் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். ஆனால், தேவஸ்தானத்தில் உயர் பதவியில் இருப்பதாக கூறி, பலர் பக்தர்களை ஏமாற்றி வருவது தொடர்பான புகார்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. சுவாமி தரிசனம், தங்குமிடம் தொடர்பாக போலியான வாக்குறுதிகள் தந்து, அவர்கள் பணமோசடியில் ஈடுபட்டு வருவதும் தொடர்கதையாக உள்ளது. இதுபோ ன்ற போலியான இடைத்தரகர்களை நம்பி பக்தர்கள் கட்டணங்கள் எதுவும் செலுத்தி ஏமாற வேண்டாம் . இடைத்தரகர்கள் குறித்து தகவல் கிடைத்தால், தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். கோவில் தொடர்பான தகவல்களுக்கு கட்டணமில்லா சேவை எண்ணை தொடர்பு கொள் ளுங்கள். இடைத்தரகர்களை அடையாளம் காணும் பணியில் தேவஸ்தான அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் அருகில் சுற்றித்திரியும் இடைத்தரகர்களை கோவில் நிர்வாகம் போலீஸ் உதவியுடன் பிடித்து உதைக்கவேண்டும்.