உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாட்டுக் கொழுப்பில் திருப்பதி லட்டு; விஸ்வரூபம் எடுத்தது விவகாரம்; ஆந்திரா அரசியலில் புயல்!

மாட்டுக் கொழுப்பில் திருப்பதி லட்டு; விஸ்வரூபம் எடுத்தது விவகாரம்; ஆந்திரா அரசியலில் புயல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது; துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பலர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது.திருப்பதி வரும் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை அதிகமாக வாங்கி செல்வர். இதற்கென நாளொன்றுக்கு மூன்று லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. லட்டு தயார் செய்வதற்காக மாதம் 42 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jkacldiv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சூழ்நிலையில், முந்தைய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். மறுநாள், பிரசாதம் தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது. அதில், திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரிய புயலை கிளப்பி உள்ளது.

முதல்வர் அறிக்கை

இதனிடையே அறிக்கை வெளியானதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முந்தைய ஓய்எஸ்ஆர் அரசு, இழிவுபடுத்திய திருப்பதி கோயிலின் புனிதபடுத்தும் பணியை நாங்கள் துவங்கி உள்ளோம். லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு உள்ளிட்டவற்றை கலப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை நாங்கள் துவக்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

மறுப்பு

இந்த குற்றச்சாட்டை மறுத்த ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி, அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த எல்லைக்கும் செல்வார். இந்த குற்றச்சாட்டு குறித்து திருப்பதி கோயிலில் அவர் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்வாரா? கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையயும், கோவிலின் புனிதத்தையும் அவர் சேதப்படுத்திவிட்டார் எனக்கூறியிருந்தது.

வழக்கு

அக்கட்சி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து பதவியில் உள்ள நீதிபதி அல்லது நீதிமன்றம் நியமிக்கும் குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

விவாதம்

துணை முதல்வர் பவன் கல்யாண் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலப்பது தெரியவந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக முந்தைய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைத்த திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். தேசிய அளவில், கோவில் தொடர்பான பிரச்னைகளை ஆராய சனாதன தர்மா ரக்ஷனா வாரியம் அமைப்பதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. இது தொடர்பாக கொள்கை வகுப்பாளர்கள், ஆன்மிக தலைவர்கள், நீதித்துறை , பொதுமக்கள் மற்றும் மீடியாக்களில் விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அச்சம்

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும். ஹிந்து சமூகத்தினர் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் பல ஹிந்துவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறியுள்ளார்

மகாபாவம்

முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறுகையில், திருப்பதியில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி பிரசாதம் செய்து மகாபாவம் செய்துவிட்டார்கள். பிரசாதத்தின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது என பல முறை தேவஸ்தான நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றோம் என்றார்.

பா.ஜ., கருத்து

இதனிடையே, ஆந்திர மாநில பா.ஜ.,வினர் கூறுகையில், திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்தது என்ற சந்திரபாபுவின் கருத்து ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தி உள்ளது எனக்கூறியுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளக்கம்

இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற நெய்யை வழங்கியதாக கூறி தடை பட்டியலில் வைக்கப்பட்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி அதிகாரிகள் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: எங்களது நெய்யின் தரத்தை உறுதி செய்ய எந்த ஆய்வுக்கும் உட்படத் தயார். திருப்பதி தேவஸ்தானம் எழுப்பிய கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமாக பதில் அளித்து வருகிறோம். நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை. ஜூன் மாதம் முதல் 4 டேங்கர் லாரி நெய் அனுப்பினோம். டேங்கருக்கு 14 - 16 டன் நெய் இருக்கும். ஜூலை மாதம் அனுப்பிய நெய்யின் தரம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் கேள்வி எழுப்பியது. அதற்கு விளக்கம் அளித்தோம். இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஜெகன் மோகன் விளக்கம் அளிக்கிறார்

இந்த விவகாரம் தொடர்பாக ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மாலை 3 மணிக்கு நிருபர்களை சந்திக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Rajpal
செப் 22, 2024 10:56

எங்களுக்கு இருந்தது ஒரு லட்டு??சந்திரபாபு நாயுடு பதவியேற்று மூன்று மாதங்கள் ஆகிறது. எல்லா அதிகாரமும் அவரிடம் இருக்கிறது. அப்படி இருக்க, இந்த கலப்பட விஷத்தை சைலண்ட் ஆக முடித்திருக்க வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக பல இலட்சம் பக்தர்களின் நம்பிக்கையோடு விளையாடி விட்டீர்கள்.


Bahurudeen Ali Ahamed
செப் 21, 2024 19:48

அருமை, அருமை தவறு எங்கு நடந்தது என்று விசாரித்து தண்டனை அளிக்க வேண்டுமே தவிர இதை அரசியல் ஆதாயத்திற்காக அவர் செய்தார் இவர் செய்தார் என்று கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சாட்டக்கூடாது. இது ஒரு சமூகத்தின் நம்பிக்கை சார்ந்த விஷயம், அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு புனிதம், மற்றவர்களின் நம்பிக்கையை பாழ்படுத்துபவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும், மேலும் பொதுமக்களும் நம்பிக்கையின் பேரில்தான் பொருட்களை வாங்குகின்றனர் அவர்களுக்கும் கலப்படமில்லாத பொருட்களை வழங்க வேண்டும். நம்பிக்கை துரோகம் மிகப்பெரிய குற்றம்


Vignesh V
செப் 21, 2024 05:01

சுத்த பொய் மலிவான அரசியல்சந்திரபாபு நாயுடு தன் மாமனாரான என் டீ.ர் ஐ பதவி விலக வைத்து செருப்பால் அடித்தவர். இவர் அரசியல் லாபத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார். இவர் நடத்தும் ஹெரிடேஜ் பால் பிசினஸ்ஐ வளர்க்கும் நரித்தனமாகவும் இருக்கலாம். ஜாக்கிரதை ஆந்திர மக்கழே


Dharmavaan
செப் 20, 2024 21:37

மதம் மாறியவன் ஹிந்து பெயரை முழுதுமோ, பகுதியாகவோ,ஜாதி i பெயருடனோ வைத்துக்கொள்ள தடை விதிக்க சட்டம் வேண்டும்


sankar
செப் 20, 2024 21:06

பிற மத நபர்களை தேவஸ்தான கமிட்டி & கமிஷனராக ரெட்டிகாரு நியமித்தார் - அதன் விளைவு இது...


Ramesh Sargam
செப் 20, 2024 21:04

உண்மையில் லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் கலப்படம் இருந்திருந்தால், அந்த வெங்கட்ரமனா கோவிந்தா சும்மா இருக்கமாட்டார். கலப்படக்காரர்களை சரியாக தண்டிப்பார். வயநாடு மாதிரி ஆந்திராவிலும் ஏதாவது பெரிய இயற்கை பேரிடர் ஏற்படலாம்.


Rasheel
செப் 20, 2024 20:49

ஹிந்துக்கள் மட்டுமே எல்லா மதமும் சம்மதம் என்பவர்கள்.


தமிழ்வேள்
செப் 20, 2024 19:55

திருப்பதி பாலாஜி க்கு பாரத தேசம் முழுவதும் அத்யந்த பக்தர்கள் உண்டு.. இந்த விவகாரம் பற்றிக்கொண்டால் ஜேக்கப் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கை அதோகதி ஆகிவிடும்....1857 பாரத விடுதலைப் போருக்கு காரணமே இந்த மாதிரியான மாட்டுக் கொழுப்பு விவகாரம் தான்...


Easwar Kamal
செப் 20, 2024 19:46

நல்ல டேஸ்ட்டா இருக்குனு 5 பத்துனு தின்னுட்டு இப்போ வந்து புலம்புற்றனுவ. இப்போ கூவுற அரைசியல்வாதிகள் எவனும் இந்த 5 வருஷத்துல திருப்பதி கோவில் பக்கம் போனதே இல்லையாகும். நல்ல கதை விடுறானுங்க.


தாமரை மலர்கிறது
செப் 20, 2024 19:14

சுத்த நெய்யில் கலப்படம் கலக்கும் வியாபாரிகளின் நரித்தனம். இந்த நெய் திருப்பதி லட்டுவிற்காக செல்கிறது என்று அறியாமல் கூட செய்திருக்கலாம். ஏதுவாக இருப்பினும், திருப்பதி நெய் மட்டுமின்றி, எந்த பொருளிலும் இனி இந்தியாவில் கலப்படம் இருக்க கூடாது. அரிசியில் முன்பு கல் கலப்பார்கள். தற்போது கிராம்பு, நெய், எண்ணெய், பட்டை, ஜீரா என்று அனைத்திலும் கலப்படம் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை