திருத்தணி படி உற்சவ பக்தி இசை பாடகர் காலமானார்
தங்கவயல்: திருத்தணியில் திருப்படி உற்சவத்தை, தங்கவயலின் பக்தி இசை பஜனை கோஷ்டியினர் 56 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 11:45 முதல் 12:45 மணி வரை பக்தி இசை பாடகர் சந்திரன் தலைமையிலான பஜனை குழுவினரின் இசை கச்சேரி நடந்தது.இவர்கள், தங்கவயலுக்கு காரில் திரும்பினர். பேரணாம்பட்டுக்கு வந்தபோது பாடகர் சந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வி.கோட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.அவரது உடல், தங்கவயலுக்கு கொண்டு வரப்பட்டது. இவரது மறைவுக்கு ஆன்மிக பக்தர்கள், சமூக, அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.