உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிசம்பர் 26 முதல் ரயில் கட்டணம் மாற்றியமைப்பு; 215 கி.மீ வரை பயணித்தால் ஏதும் மாற்றமில்லை!

டிசம்பர் 26 முதல் ரயில் கட்டணம் மாற்றியமைப்பு; 215 கி.மீ வரை பயணித்தால் ஏதும் மாற்றமில்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 215 கி.மீ வரை பயணித்தால் கட்டணத்தில் ஏதும் மாற்றமில்லை.இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:* நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. புறநகர் ரயில்கள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு இல்லை.* சாதாரண வகுப்பில், 215 கிமீ வரை பயணிப்போருக்கு கட்டண உயர்வு ஏதும் கிடையாது.* முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில், 215 கிமீக்கு மேல் பயணிப்போருக்கு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிப்பட்டு உள்ளது.* 215 கி.மீ தூரத்திற்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏசி, ஏசி இல்லாத வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கிமீக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.* கட்டண உயர்வால் இந்த ஆண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும்.* ஏசி இல்லாத பெட்டிகளில் 500 கி.மீ பயணத்திற்கு, பயணிகள் 10 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.* கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் தனது சேவைகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அதிகம் கவனம் செலுத்துகிறது. இதன் விளைவாக செலவு ரூ. 1,15,000 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25ம் ஆண்டில் மொத்த செயல்பாட்டுச் செலவு 2,63,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.* அதிக செலவினங்களை சமாளிக்க, பயணிகள் கட்டணத்தில் ஒரு சிறிய அளவு மாற்றம் செய்யப்படுகிறது. * இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சரக்கு போக்குவரத்து ரயில்வேயாக மாறியுள்ளது.சமீபத்தில் பண்டிகைக் காலங்களில் 12,000க்கும் மேற்பட்ட ரயில்களை வெற்றிகரமாக இயக்கப்பட்டு இருக்கிறது. * தனது இலக்குகளை அடைவதற்காக, ரயில் சேவைகளை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அதல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

K.n. Dhasarathan
டிச 21, 2025 16:45

ரயில்வே நிர்வாகமே தமிழகத்தில் கொரோனா காலத்தில் ரத்து செய்த பல ரைலகளை இன்னும் இயக்கவில்லை புதிய ரயில்கள் வரவில்லை வந்த ரயில்கள் எல்லாம் வந்தே பாரத் மட்டும்தான், ஏன் ? இங்கேதான் ஒழுங்காக கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்குகிறார்கள், அதனாலா? வட மாநிலங்களில் அதிக ரயில்கள், தென் மாநிலம் என்றால் இல்லையா ?


A.Gomathinayagam
டிச 21, 2025 14:20

திராவிட மாடல் அரசை பின்பற்றுகிறார்கள் .அவர்கள் தான் மின்சாரக்கட்டணத்தை ஏற்றி விட்டு இது நூறு யூனிட் உபயோகிக்கும் சாமானியர்களை பாதிக்காது என்பார்கள் .மொத்தமாக ஏற்றலாமே ,இரண்டு ரூபாய் பதினைந்து பைசா கொடுக்க சாமானியர்கள் தயாராக தான் இருக்கிறார்கள் உண்மையில் நன்மை செய்ய வேண்டும் என்றால் மூத்த குடிமக்கள் இழந்த கட்டண சலுகைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்


எஸ் எஸ்
டிச 21, 2025 14:12

சென்னை - மதுரை, சென்னை - கோவை ரூபாய் 10 அதிகரிப்பு. ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு னு ஒரு கூட்டம் வரும் பாருங்க....


தமிழ்வேள்
டிச 21, 2025 14:05

சென்னை சபர்பன் ரயில் கட்டணம் ஏற்றப்பட வேண்டும்.. ரயிலில் 19 கிமீ க்கு ரூ.ஐந்து மட்டுமே கட்டணம் அதே தொலைவுக்கு மா.போ.க கட்டணம் ரூ.முப்பத்தைந்து..ஆனால் கூட்டம் குறையவில்லை..குறையவில்லை... ரயிலில் குறைந்த பட்ச கட்டணம் ரு.பத்தாக மாற்ற வேண்டும்...


kjpkh
டிச 21, 2025 14:02

இந்த செய்தியை பார்த்ததும் சிலிர்த்து கொண்டு வருவார்களே.


Shekar
டிச 21, 2025 13:46

கிலோமீட்டருக்கு 1 பைசா, 2 பைசா ஏத்துனா, பாவம் ஏழைகள் டிக்கெட் வாங்கமுடியாது, பாவி மத்திய அரசு. மின்சாரக்கட்டணம் 500 ரூபாய் உயர்ந்தால் ஆஹா விடியலரசு.


vadivelu
டிச 21, 2025 13:21

இதென்ன பால் விலையா , வீட்டு வரியா, மின்சார கட்டண உயர்வா, அரிசி. பருப்பு விலைஉயர்வா இல்லையே அதனால் இதை தமிழகத்தில் ஒரு கூட்டம் எதிர்க்கும்


Alphonse Mariaa
டிச 21, 2025 13:14

ரயில்வே வருடா வருடம் தொகையை உயர்த்த வேண்டும். இது உள் கட்டமைபப்பு மேம்படுத்த உதவும்


Alphonse Mariaa
டிச 21, 2025 13:12

வீடு, நிலம், தண்ணீர், பத்திர பதிவு, மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசு மற்றும் அந்த கட்சிக்கு ஒட்டு போட்டவர்கள் பேச தகுதி இல்லை


மேலும் செய்திகள்







புதிய வீடியோ