உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1,000 கோடி பினாமி சொத்து வழக்கு அஜித் பவாரை விடுவித்தது தீர்ப்பாயம்

ரூ.1,000 கோடி பினாமி சொத்து வழக்கு அஜித் பவாரை விடுவித்தது தீர்ப்பாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பினாமி பெயரில் சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி வைத்த நடவடிக்கையை, வருமான வரித்துறை விலக்கிக் கொண்டது.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. துணை முதல்வராக உள்ள தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது, பினாமி பெயரில் சொத்து குவித்ததாக 2021ல் வழக்கு தொடரப்பட்டது.அப்போது பல்வேறு இடங்களில் சோதனை செய்த வருமான வரித்துறை, பினாமி சொத்து தடுப்புச் சட்டத்தின்கீழ், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது. மஹாராஷ்டிராவில் பல நிலங்கள், டில்லியில் ஒரு குடியிருப்பு, கோவாவில் ரிசார்ட் உள்ளிட்டவை இதில் அடங்கும்.அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ரா, மகன் பார்த் பவார் ஆகியோர் மீது, பினாமி பெயரில் சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பான வழக்கை விசாரித்த பினாமி சொத்து பரிவர்த்தனை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. 'பினாமி பெயர்களில் அஜித் பவார் சொத்து வாங்கியதும், அதற்கு அவரோ, அவருடைய குடும்பத்தாரோ பண பரிவர்த்தனை செய்ததும் நிரூபிக்கப்படவில்லை' என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விடுவித்து, வருமான வரித்துறை நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 5ம் தேதி, மீண்டும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவாருக்கு, இந்த உத்தரவு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

K.n. Dhasarathan
டிச 08, 2024 16:21

வருமான வரித்துரையா அல்லது வேறு பெயரா ? 1000 கோடி பினாமி சொத்து என்று சொல்லி வழக்கு போட்டது நீங்கள்தானே ? இப்போது எதற்கு வாபஸ் ? இதென்ன விளையாட்டா ? நீதி மன்றங்கள் என்ன செய்கின்றன ? தானாக முன் வந்து வழக்கு போடா நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது அல்லவா ? அஜித் பவார் மட்டுமல்ல, இந்த தீர்ப்பாயம் மீதும் வழக்கு பதிவு செயுங்கள். பதவிக்கு வந்து விட்டால் அவர்களுக்கு காவடி துக்கும் கலாச்சாரம் ஒழிய வேண்டும். நேர்மையும் நியாயமும் தான் வெல்ல வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 13:52

கொஞ்சமேனும் புத்தியும் மனசாட்சியும் பக்தி யும் இருந்தால் பேசவே கூடாது


Sampath Kumar
டிச 08, 2024 11:57

சங்களின் சங்க தலைவர் சிங்கப்பூர் சீமான் காசிக்கு நன்றி


RAAJ68
டிச 08, 2024 11:56

உங்களுக்கு எல்லாம் எப்படி ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடி சொத்துக்கள் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா. நீங்கள் என்ன ராஜ பரம்பரையா. அவனவன் நூறு ரூபாய் கூறி பெறுவதற்கு முட்டி தேய உழைக்ழக்கிறான். உங்களுக்கு கோடிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக உள்ளது. முடக்கப்பட்ட உங்களுடைய சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே பிஜேபிக்கு நீங்கள் அடிமையாக ஆகிவிட்டீர்கள்.


Sampath Kumar
டிச 08, 2024 11:34

யாரும் இருக்கும் இடத்தில இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே கண்ணதாசன் அய்யாவின் வரிகள் பிஜேபிக்கு இன்னகமாக இருந்தால் என்னத்த பின்னகமும் வராது சுண்ணக்கமும் நிகழாது என்பதி தான் இது காட்டுகிறது நாட்டில் லஞ்ச லாவண்யத்தை ஓழ்ப்போம் என்று ஆட்சி வரும் அதனை கட்சிகளும் ஊழல் சூழல் இல் சிக்கி சின்ன பின்னமாகி விடுவது வாடிக்கை


Sridhar
டிச 08, 2024 15:01

அப்போ அந்த ஆளு ஊழல் பேர்வழிங்கறது உனக்கு தெரியும்.


முருகன்
டிச 08, 2024 11:27

கூட்டணி வைத்துக் கொண்டதற்கு கிடைத்த பரிசு ஊழல் காதை எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே


abdul
டிச 08, 2024 11:06

வாஷிங்மெஷின் கட்சி என்றால் சும்மாவா நல்லாவே சாயம் போய் வெளுக்குது


RAJ
டிச 08, 2024 10:55

அது..


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 10:23

செபா , பொன்முடி லாம் ஒவ்வொரு மாநிலத்திலயும் இருக்காங்களே பாஸ்...


Tirunelveliகாரன்
டிச 08, 2024 13:29

கொஞ்சம் கூட வெட்க பட மாட்டீங்களா


பாமரன்
டிச 08, 2024 08:56

மிகவும் கேவலமான நிகழ்வு.. இப்போ விடுவிச்சது சரின்னா முன்பு செஞ்சது மிரட்டலா...


Mohammad ali
டிச 08, 2024 13:18

உன் சொந்த பெயரில் பதிவிட்டு


முக்கிய வீடியோ