உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: 97 சதவீத இடங்களில் பா.ஜ., வெற்றி

திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: 97 சதவீத இடங்களில் பா.ஜ., வெற்றி

அகர்தலா : திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் பா.ஜ., 97 சதவீத இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 8ல் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 71 சதவீத இடங்களில் எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என அறிவித்தன. தேர்தலில் வெற்றி பெற ஆளும் பா.ஜ., மோசமான வழிமுறைகளை பின்பற்றுவதால், இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தன.அந்த இடங்கள் அனைத்திலும் பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியின்றி வென்றனர். மீதமுள்ள 29 சதவீத இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அதன் முடிவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், தேர்தல் நடந்த 606 கிராம பஞ்சாயத்துகளில் 584லும், 35 ஊராட்சி ஒன்றியங்களில் 34லும், எட்டு மாவட்ட ஊராட்சிகளில் அனைத்திலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் திரிபுரா மோத்தா ஆகிய கட்சிகள் சொற்பமான இடங்களை மட்டுமே பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Saai Sundharamurthy AVK
ஆக 15, 2024 15:22

பாஜகவுக்கு வாழ்த்துக்கள் !


விஜய்ஹிந்து
ஆக 15, 2024 11:43

super BJP


Barakat Ali
ஆக 15, 2024 08:53

2029 க்கு முன்னோட்டம் .........


சுலைமான்
ஆக 15, 2024 07:38

வாழ்த்துகள்.... பாரதம் முழுக்க தேச விரோத கட்சிகள் துடைத்தொழிக்ப் பட வேண்டும்


Iyer
ஆக 15, 2024 07:12

நாடு முழுவதும் எல்லா தேர்தலில்களிலும் "தேச துரோக கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்" கட்சிகள் பாய்காட் செய்யட்டும்.


raja
ஆக 15, 2024 06:41

சூப்பர் வாழ்த்துக்கள்...


Kasimani Baskaran
ஆக 15, 2024 05:36

நாங்கள் ஏவிஎம்மை கூட நம்புவோம் இவிஎம் மை ஒருபொழுதும் நம்பமாட்டோம்...


vadivelu
ஆக 15, 2024 06:38

ஆட தெரியாதவன் மேடைகளை நம்பத்தான் மாட்டான். மேடை அமையவே அமையாது புலம்பலும் நிற்காது.


Yuvaraj Velumani
ஆக 15, 2024 08:56

அப்ப திமுக பெற்ற வெற்றி செல்லாது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி