உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் " - ராகுல் நம்பிக்கை

" மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் " - ராகுல் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ‛‛ பா.ஜ., வெறும் கூச்சல் மட்டும் போட்டுக் கொண்டு உள்ளது. ஆனால், அரசியல்சாசனத்தை மாற்றுவதற்கு அக்கட்சிக்கு தைரியம் இல்லை. உண்மையும், மக்களின் ஆதரவும் எங்கள் பக்கமே உள்ளது '', என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசுகையில், பா.ஜ., வெறும் கூச்சல் மட்டும் போட்டுக் கொண்டு உள்ளது. ஆனால், அரசியல்சாசனத்தை மாற்றுவதற்கு அக்கட்சிக்கு தைரியம் இல்லை. உண்மையும், மக்கள் ஆதரவும் எங்கள் பக்கமே உள்ளது.வரும் தேர்தல், இரண்டு கட்சிகளுக்கு இடையே நடப்பது இல்லை. இரண்டு கொள்கைகளுக்கு இடையே நடக்கிறது. மத்தியில் இருந்து நாட்டை நடத்த வேண்டும் என ஒருவர் நினைக்கிறார். ஆனால், நாங்கள் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறோம்.பிரதமரும் ஆர்எஸ்எஸ் அமைப்பும், அறிவு ஒருவரிடம் மட்டுமே உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வேலை இல்லாதவர்களுக்கு இல்லை என நினைக்கின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை