மேலும் செய்திகள்
நைஜீரியா பள்ளி குழந்தைகளை கடத்திய ஆயுதமேந்திய கும்பல்
3 hour(s) ago
உடுப்பி: கர்நாடகாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து, பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கர்நாடகாவின் உடுப்பி மல்பேயில், 'கொச்சி ஷிப்யார்டு' நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. நம் கடற் படைக்கு இங்கிருந்து தான், கண்காணிப்புப் பணிக்கான இழுவை படகுகள் தயாரிக்கப்படுகின்றன. கப்பல் கட்டும் தளத்தில் பணி செய்யும் ஊழியர்கள் சிலர், தளத்தின் தகவல்களை வேறு யாருக்கோ கொடுப்பதாக மல்பே போலீஸ் நிலையத்தில் அந்த நிறுவனம் புகார் அளித்தது. போலீசா ர் நடத்திய விசாரணையில், கப்பல் கட்டும் தளத்தில் வேலை செய்த உத்தர பிரதேசத்தின் ரோஹித், 29, சாந்த்ரி, 37, ஆகியோர், கப்பல் கட்டும் தளத்தின் கட்டுமானம், பழுதுநீக்கும் பணிகள் குறித்து, 'வாட்ஸாப்' மூலம் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியது தெரிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
3 hour(s) ago