உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரியமாகனுமா ‛‛கழுதையானாலும் காலைப் பிடி: உத்தவ்வை விமர்சித்த பா.ஜ.,

காரியமாகனுமா ‛‛கழுதையானாலும் காலைப் பிடி: உத்தவ்வை விமர்சித்த பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், முதல்வர் பதவிக்காக அற்ப மனிதர்கள் காலில் விழுந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.மஹாராஷ்டிர சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இதற்கிடையே அம்மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் டில்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இதனை பா.ஜ., தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறியதாவது: உத்தவ் தாக்கரே முதல்வர் பதவிக்காக அற்ப மனிதர்களின் காலில் விழுந்துள்ளார். அவர் முற்றிலும் மதசார்பற்றவராக மாறிவிட்டார், சிவசேனாவின் சித்தாந்தத்தை கைவிட்டுவிட்டார். அவரது தந்தை பாலாசாகேப் தாக்கரேவின் குணங்களில் ஒரு சதவீதம் கூட அவரிடம் இல்லை. அமைதியின்மையை எதிர்கொண்டுள்ள வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களை உத்தவ் தாக்கரே கண்டிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 12, 2024 22:57

ஒரு வேலை அஜித் பவார் , ஷிண்டே காலில் இவர்கள் விழுந்ததை என்ன சொல்லுவாரோ


Azar Mufeen
ஆக 12, 2024 20:39

அய்யா பிஜேபி 2018இல் மத்திய பிரதேசத்தில் கழுதை காலை பிடித்துஆட்சி அமைத்த கதை இவருக்கு யாபகம் இல்லையா


Narayanan Muthu
ஆக 12, 2024 19:30

எனக்கென்னவோ சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் இவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்


bgm
ஆக 12, 2024 20:06

இங்கே இருந்து அங்க போய் புள்ளி கூட்டணி ஆரம்பித்த அப்போ நினைவுக்கு வரல. இப்போது தான் வருது


Yaro
ஆக 12, 2024 19:08

Yokiyan varan sombaeduthu ulla vai.. apo nee yen Nitish matrum Chandrababu kala kazhuvura?


Jai
ஆக 12, 2024 19:01

ஆமாம். காரியம் ஆக வேண்டுமென்றால் காலை பிடி, காரியம் முடிந்தால் கழுத்தை பிடி. வயநாடு இடைத்தேர்தலில் வருவதை கருத்தில் கொண்டு பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்படுவதற்கு அறிக்கை மிகச்சிறந்த உதாரணம். ஆட்சிக்கு வந்த பின் 2013 இல் இந்துக்களுக்கு எதிரான சட்ட திருத்தம் வக்ஃப் வாரியத்தில். ஆக்கிரமித்தால் கோர்ட்டுக்கு செல்லக்கூடாது, ஆக்கிரமித்தவர்களிடமே சென்று பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமாம். இது கழுத்தை பிடிக்கும் விஷயம்.


Indian
ஆக 12, 2024 18:37

தரம் கேட்ட விமர்சனம் ...


Swaminathan L
ஆக 12, 2024 18:27

அரசியலில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத, தேவைக்கேற்ப வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளாத பிரபலங்கள் யாருண்டு தற்போது? உத்தவ் கட்சியும், அவரது அரசியல் இருப்பும் நீடிக்க வேண்டுமானால் அவர் ராகுல், ஷரத் பவார் ஆகியோரிடம் இணக்கமாகப் போகத்தான் வேண்டும்.


Kavi
ஆக 12, 2024 17:51

Number one yokian


nagendhiran
ஆக 12, 2024 17:50

பதவிக்காக யார் காலையூம் பிடிப்பார் போலையே?


Angappan
ஆக 14, 2024 06:23

பிஜேபி கூட இவ்வளவு காலம் இருந்துட்டு இத கூட தெரிஞ்சிக்கலனா எப்படி


SANKAR
ஆக 12, 2024 17:35

appo prathamar pathavikkaaga thannal pala murai oozhal mannan endru sollapatta Nitish kaalil vizhunthavar yaar?!


மேலும் செய்திகள்