உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் மூன்று நாள் முகாமிடுகிறார் உத்தவ்

டில்லியில் மூன்று நாள் முகாமிடுகிறார் உத்தவ்

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி ராகுல் உள்ளிட்ட காங்., தலைவர்களை சந்திக்க டில்லி செல்ல உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இம்மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ,பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.எதிர்க்கட்சியான ‛‛மஹா விஹாஸ் அகாடி'' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் உள்ளிட்ட கட்சிகள், இந்த சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளன. இந்த சூழ்நிலையில் உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மூன்று நாள் பயணமாக இன்று டில்லி செல்ல உள்ளதாகவும், அங்கு ராகுல், சோனியா, கார்கே மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ள சில தலைவர்களையும் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nandakumar Naidu.
ஆக 07, 2024 12:08

புலியாக இருந்து பூனை யாகிப்போனவர்.


Kasimani Baskaran
ஆக 07, 2024 05:48

நூறு தொகுதிகளைக்கூட தொடாத காங்கிரசுடன் கும்மியடிக்க உத்தவால் மட்டுமே முடியும். கால் கடுக்க காத்திருந்தாலும் கூட புத்தி வராது என்றுதான் தோன்றுகிறது.


Mohanakrishnan
ஆக 06, 2024 22:58

Let him see the photo and the ideology of his father before boarding the flight.


மேலும் செய்திகள்