உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொதுவெளியில் விபரங்களை வெளியிடாத 54 பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கிடுக்கி

பொதுவெளியில் விபரங்களை வெளியிடாத 54 பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கிடுக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உயர்கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்படி, பொதுவெளியில் கட்டாய விபரங்களை சமர்ப்பிக்காத 54 தனியார் பல்கலைகள் தவறிழைத்து உள்ளதாக யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு அறிவித்துள்ளது.நம் நாட்டில் உள்ள பல்கலைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், பொது நிதி ஆதாரங்களை பயன்படுத்தவும் மத்திய அரசு சார்பில் யு.ஜி.சி., அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் சட்டப்பிரிவு 13ன் கீழ், பல்கலை தொடர்பான கட்டாய தகவல்களை பொதுவெளியில் சமர்ப்பிப்பது அவசியம்.

கட்டாய தகவல்

மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பல்கலை பற்றிய தகவல்களை எளிதில் அணுகும் வகையில் இணையத்தின் முகப்பு பக்கத்தில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன; காலியிடங்கள் எத்தனை? ஒவ்வொரு படிப்புக்கும் எவ்வளவு கட்டணம் செலுத்துவது உட்பட பல்கலை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டாய தகவல்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஆனால், நம் நாட்டில் உள்ள பல பல்கலைகள், அந்த விபரங்களை இதுவரை வெளியிடாமல் இருப்பதை யு.ஜி.சி., கண்டறிந்துள்ளது. இதன்படி, பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட துணை ஆவணங்களுடன், ஆய்வு நோக்கங்களுக்காக விரிவான தகவல்களை சமர்ப்பிக்கும்படி பல பல்கலைகளுக்கு இ - மெயில் மற்றும், 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டங்கள் வாயிலாக பல நினைவூட்டல்களை யு.ஜி.சி., நிர்வாகம் அளித்தது.

கடும் நடவடிக்கை

எனினும் இதில், 54 பல்கலைகள் அந்த விபரங்களை சமர்ப்பிக்காதது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவற்றை தவறிழைத்த பல்கலைகள் என யு.ஜி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தின் 10 பல்கலைகள் இடம்பிடித்துள்ளன. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், 'பல்கலைகள், தங்கள் இணையதளங்களில் வெளியிடும் தகவல்களை, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, தேடல் வசதியும் ஏற்படுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை தொடர்ந்து புறக்கணிக்கும் பல்கலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழ் நிலன்
அக் 02, 2025 06:35

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகதங்களில் சுமார் 2000 போலி பேராசிரியர்கள் பணியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து கண்டுபிடித்த போது கூட அமைதியாக இருக்கும் UGG இப்போது ஏன் பதறுகிறது....


ஜெய்ஹிந்த்புரம்
அக் 02, 2025 02:54

அப்போ ஆல் பொலிட்டிகல் சைன்ஸ் படிச்சவங்களோட டிகிரி சர்ட்டிபிகேட்டை பொதுவெளியில் சரி பார்க்க விடுவாங்களா? அட்லீஸ்ட் அந்த பாடத்திட்டம் எப்போ இருந்தது, அதை படிச்ச வல்லுனர்கள் யாருன்னு சரி பார்க்லாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை