உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்... கேலிப்பொருளாக மாறியது ரூ.640 கோடி போர் விமானம்!

ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்... கேலிப்பொருளாக மாறியது ரூ.640 கோடி போர் விமானம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: பழுதான நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று வாரங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் பிரிட்டீஷ் கடற்படை போர் விமானம், இணையத்தில் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.பிரிட்டீஷ் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ், அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து சரக்கு கப்பல்களை காப்பது, வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த போர்க்கப்பல், பணியில் ஈடுபட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f3nrb8mi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தொழில்நுட்ப கோளாறு

இதில் இருந்து ஜூன் 14ல் புறப்பட்ட எப் 35 பி போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பில் இருந்தபோது எரிபொருள் பற்றாக்குறை பிரச்னையை எதிர்கொண்டது. இதையடுத்து அவசர உதவி கோரியதால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டது. மத்திய அரசு உத்தரவுபடி எரிபொருள் வழங்கப்பட்டது. ஆனாலும், விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பறக்க முடியவில்லை.

ரூ.640 கோடி

அப்போது முதல், மூன்று வாரங்களாக இந்த விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை பழுது நீக்கும் முயற்சியில், பிரிட்டீஷ் கடற்படை பொறியாளர்கள், விமானம் தயாரித்த நிறுவனத்தின் பொறியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. ரூ.640 கோடி மதிப்புள்ள அதிநவீன போர் விமானம், இன்னொரு நாட்டில் இப்படி பழுதாகி நிற்பது பிரிட்டனுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் பெரும் அவமானமாக கருதப்படுகிறது.

என்ன நடவடிக்கை?

இந்த விவகாரம் குறித்து, பிரிட்டீஷ் பார்லிமென்டில் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி., ஒபிஸ் ஜெக்டி கேள்வி எழுப்பினார். 'இந்திய விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள எப் 35 பி போர் விமானத்தை மீட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று அவர் கேட்டார். ''விமானத்தை கொண்டு வர இன்னும் எத்தனை காலம் ஆகும், அதில் இருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் ரகசியத்தை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

24 மணி நேரமும்....!

இதற்கு பதில் அளித்த பிரிட்டன் அமைச்சர் லுாக் பொல்லார்டு, ''விமானம் பிரிட்டீஷ் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. நமது இந்திய நண்பர்கள் சிறப்பான உதவிகளை செய்து வருகின்றனர். விமானத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் விமானப்படை பணியாளர்கள், 24 மணி நேரமும் அதன் அருகிலேயே உள்ளனர்,'' என்றார். இந்த விமானத்தை தனித்தனியாக பிரித்து கொண்டு செல்வதா, சரக்கு விமானத்தில் துாக்கிச் செல்வதா என்று முடிவு செய்ய முடியாமல், பிரிட்டன் ராணுவமும், கடற்படையும் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாற்காலி தாங்க...!

இந்த விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, அதன் பைலட் விமானத்தை விட்டு சிறிது துாரம் கூட நகர மறுத்து விட்டார்.சட்டபூர்வமான நடைமுறைகளுக்காக விமான நிலையத்துக்குள் வரும்படி அழைத்தபோது கூட மறுத்தார். தனக்கு ஒரு நாற்காலி வேண்டும் என்று கேட்டு வாங்கி, மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல், விமானம் அருகிலேயே உட்கார்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன சென்சார்கள்

எப் 35 பி போர் விமானம், அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் என்ற முன்னணி விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது, குறுகிய தொலைவு கொண்ட ஓடுபாதையிலும் 'டேக்ஆப்' செய்யும்; செங்குத்தாக தரை இறங்கும் திறன்களை கொண்டது.'ஸ்டெல்த்' எனப்படும் ரேடார்களில் கண்டறிய முடியாத தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த விமானம், அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டது. இந்த விமானம், அமெரிக்கா தவிர, பிரிட்டன் மற்றும் இத்தாலி நாட்டு ராணுவத்தினர் வசம் மட்டுமே உள்ளது.வேறு எந்த நாடுகளிடமும் இல்லை. அதனால், விமானத்தின் தொழில்நுட்பங்களை பொக்கிஷம் போல பாதுகாக்கின்றனர்.

கேலி, கிண்டல்

ரூ.640 கோடி மதிப்பிலான இந்த அதிநவீன போர் விமானம், பழுதாகி நிற்பது சமூக வலைதளங்களில் 'மீம்'களாக பரவி கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

அற்புதமான இடம்

கேரள சுற்றுலாத்துறையும் தன் பங்குக்கு இந்த விமானத்தின் படத்தை வைத்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. 'கேரளா வந்து விட்டால், திரும்பிச் செல்ல மனம் வராது' என்று பொருள்படும் வகையில், 'கேரளா ஒரு அற்புதமான இடம், நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. நிச்சயமாக பரிந்துரை செய்கிறேன்' என்று விளம்பரம் வெளியிட்டுள்ளனர். விமானத்தை மாட்டு வண்டியில் கொண்டு செல்வது போலவும், இரும்பு வியாபாரிகள் பேரம் பேசுவது போலவும் மீம்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sasikumaren
ஜூலை 06, 2025 05:19

இப்படி பழுது நிறைந்திருக்கும் போர் விமானங்களை ஆயுதங்களை வைத்து கொண்டு எப்படி தோரணையாக பேசுகிறார்கள் மட்டமான போர் ஆயுத தயாரிப்பில் சைனா முதலிடத்தில் இருக்கிறது என்று நினைத்தது தவறாகிவிட்டது அமெரிக்காவின் நம்பிக்கையை பெற்ற இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளின் என்ன கதியோ இப்படி நிற்க வைத்தால் மானம் தான் போகும் கேலிக்கிடமாக ஆகிவிட்டது வல்லரசுகள் பரிதாபமா நிலைமை.


Santhakumar Srinivasalu
ஜூலை 05, 2025 19:04

பிரிட்டனின் மிகப்பெரிய சிறப்புடைய போர் விமானம் இப்படி மிக கேவலப்பட வேண்டுமா? இது தான் இந்தியா?


V RAMASWAMY
ஜூலை 05, 2025 19:04

Anything can happen to anybody, any Nation, anywhere. Must appreciate our Nation to render all available services to UK at this time of their plane crisis. Therefore, it is better not to ridicule or say anything bad about anything or anybody.


Srinivasan Krishnamoorthy
ஜூலை 05, 2025 21:37

had it happened to indian fighter plane grounded at any nation, these western countries especially uk would have ridiculed us. it is no longer sixties, indian might is many times of uk. we could track their stealth planes


Santhakumar Srinivasalu
ஜூலை 05, 2025 18:47

இந்திய கடற்படையின் தொழில் நுட்ப செயல்பாடுகள் காரணமாக அந்த அதி நவீன போர் விமானம் முடக்கப்படுள்ளது என்பது உண்மையா?


அசோகன்
ஜூலை 05, 2025 15:04

இந்தியாவையும் ஹிந்துகளையும் கேவலப்படுத்தி வெளிநாட்டினரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் அடிமை கூட்டம் இந்தியாவில் உள்ளது....... இதுவே நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்துவது போலவும் வெளியே இந்தியார் மாட்டை கையில் பிடித்துகொண்டு நானும் விண்வெளிக்கு வருவேன் என்று கேட்பதுபோல் கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்ய...... இந்தியாவின் விலைப்போன அடிமைகள் கொண்டாட்டி குதூகலித்தனார்....... ஆனால் மோடிஜியின் ஆட்சியில் இஸ்ரோவிடம் நாசாவே முன்வந்து நாங்களும் உங்களுடன் இணைந்து செயல்படுகிறோம் என கேட்கிறார்கள்....... அதுமட்டுமா அமெரிக்காவின் அணு ஆயுத இடத்தை இந்தியா பாகிஸ்தானில் தாக்கியது அவர்களையே பொறி கலங்க வைத்துள்ளது....... மோடிஜி கடவுள் அவதாரம்


Ganesun Iyer
ஜூலை 05, 2025 14:21

சேர்லயே உக்காருந்தா, சாப்பாடு, தூக்கம், சரக்கு, ஒன்னு, ரெண்டெல்லாம் எப்படி ?


ராமகிருஷ்ணன்
ஜூலை 05, 2025 13:09

சமீபத்தில் பாக்கிஸ்தானை தோற்கடிக்க நமது ராணுவ வலிமையை வேவு பார்க்க வந்துருங்கய்யா. இங்குள்ள பிரிட்டிஷ் கைக்கூலிகளையும் கண்காணிக்க வேண்டும்


Ganapathy
ஜூலை 05, 2025 12:57

இதுவே நமது விமானம் இங்கிலாந்தில் நின்றால் ஹிந்துகளையும் பசுமாட்டு கோமியத்தையும் சேர்த்து சம்பந்தமில்லாமல் மதச்சார்பற்ற கும்பல் கிண்டல் செய்திருப்பார்கள்.


Ramkumar Ramanathan
ஜூலை 05, 2025 12:35

it's hilarious. Lockheed is the number one company in the world, but mistakes and malfunction always happen, space x rocket failure happens more often.


T. சங்கரநாராயணன், ஈரோடு
ஜூலை 05, 2025 12:32

இந்நேரம் நம்ம நாட்டு போர் விமானம் அந்த நாட்டில் பழுதாகி நின்று இருந்தால் மேற்கத்திய நாடுகள் என்னவெல்லாம் கேலி கிண்டல் பேசுவார்கள்?


RAMESH
ஜூலை 05, 2025 13:52

இங்கே இருக்கும் போலி தமிழர்களின் ஊடகங்கள் மத்திய அரசையும் நமது பிரதமர் அவர்களையும் வசை பாடி இருப்பார்கள்... காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய விமானங்கள் ஆக இருந்தாலும் திராவிட ஊடகங்கள் மோடியை தான் விமர்சனம் செய்யும்.... ஜல்லிக்கட்டு தடை செய்தது காங்கிரஸ் ஆட்சியில்....திமுக கூட்டணி...‌தடையை நீக்கியது பாஜக ஆட்சியில்... தமிழகத்தில் அதிமுக ஆட்சி.....ஆனால் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட நபர்கள் வேறு...


புதிய வீடியோ