உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை

மத்திய பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை

புதுடில்லி: அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் குறித்து நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான பணிகளில் நிதியமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.இந்நிலையில், நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட் முந்தைய ஆலோசனை கூட்டத்தை நிர்மலா சீதாராமன் நடத்தினார். இந்த கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர்கள், ரெவின்யூ மற்றும் கார்ப்பரேட் துறை செயலாளர், தலைமை பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kasimani Baskaran
ஜூன் 20, 2024 06:35

தனியாரின் பங்களிப்பில் புதிய வேலைகளை உருவாக்கினால் நல்ல பலன் உண்டு. வருமான வரியை குறைத்து அதை சேமிக்க வகை செய்யலாம்.


ES
ஜூன் 19, 2024 22:48

More tax incoming for poor people


hari
ஜூன் 20, 2024 06:49

so you are one of the poor people....


Balaji Gopalan
ஜூன் 19, 2024 22:18

அரிசிக்கும் உணவு பொருட்களுக்கு GST cancel பண்ணாலே போதும் மக்களுக்கு உபத்திரவம் இருக்காது , பெட்ரோல் டீசல் மட்டும் GST கீழே ஏன் கொண்டு வர மாட்டேன் என்கிறார்கள் , வருமான வரி கட்டுறவன் தான் இந்தியா ல எந்த வித சலுகைகள் அரசு தருவதில்லை


ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 14:39

லூஸில் விற்கப்படும் அரிசிக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் பிராண்ட் பெயருள்ள உணவுப் பொருட்களுக்கு வரி போடுவது தவறில்லை.


Ramesh Sargam
ஜூன் 19, 2024 21:04

மத்திய தர, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவும் படியாக திட்டங்களை தீட்டவும்.


Indian
ஜூன் 19, 2024 19:16

ஒரு பயனும் இல்ல.....அனுபவம் இல்லா நிதி மந்திரியை கொண்டு ஒரு பயனும் இல்லை .


hari
ஜூன் 20, 2024 06:48

நீ அந்த 200 ரூபாய் முட்டு தானே.... அப்படித்தான் பேசுவ.....


subramanian
ஜூன் 19, 2024 18:56

நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.


Rajarajan
ஜூன் 19, 2024 18:31

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு ?? அரசின் மொத்த வருவாயில், சுமார் எழுபது சதவிகிதம், அரசு ஊழியரின் சம்பளம், சலுகை மற்றும் ஓய்வூதியத்திற்காக செல்கிறது. இதில் வருடத்திற்கு இருமுறை தரப்படும் அகவிலைப்படி வேறு கூடுதல் சுமை. எனவே, முக்கிய அரசு நிறுவனங்கள் / துறைகள் தவிர, நஷ்டத்தில் இயங்கும் மற்றும் காலத்திற்கு ஒவ்வாத அரசு துறைகளை தனியார் மயம் அல்லது இழுத்து மூடினால், அரசின் கடன்சுமை, மற்றும் வருவாய் பெருமளவில் சேமிப்பாகும். அதை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அபார வளர்ச்சி பெரும். உண்மையா, இல்லையா ? இதற்க்கு எதற்கு பொருளாதார நிபுணர்களின் கூட்டம் ?? அவர்கள் சொல்லும், கூடுதல் வரிசுமையை பொதுமக்கள் மீது திணிக்க, ஒரு நிபுணத்துவ கூட்டம் தேவை என்ன ?? அப்படியெனில், இவ்வளவு வருடங்கள் சம்பிரதாயத்திற்காக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக தானே பொருள்.


K.Muthuraj
ஜூன் 19, 2024 19:26

நீங்கள் மாநில அரசில் செலக்ட் செய்து அனுப்பிய OPS, தங்கம்தென்னரசு போன்றோர் நிதித்துறையில் இருந்து என்ன சாதித்திருப்பார்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி