உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 9 கார்கள், வீடு, கோடிக்கணக்கில் சொத்து...! உ.பி.யை கலக்கும் குரோர்பதி தூய்மைப் பணியாளர்...!

9 கார்கள், வீடு, கோடிக்கணக்கில் சொத்து...! உ.பி.யை கலக்கும் குரோர்பதி தூய்மைப் பணியாளர்...!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.யில் 9 கார்கள், ஏகபோக சொத்துகள் என பெரும் வசதியுடன் வாழ்க்கை நடத்தும் ஒருவர் தூய்மைப் பணியாளராக இருக்கும் தகவல் வெளி வந்துள்ளது.

தூய்மைப் பணி

இது பற்றி கூறப்படுவதாவது: கோண்டா மாவட்டத்தில் நகர் கோட்வாலி பகுதியில் கமிஷனர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக இருப்பவர் சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வால். நாள்தோறும் சக ஊழியர்களுடன் வீதி, விதியாக இறங்கி தூய்மைப் பணியை சிரத்தையாக செய்து வருபவர்.

பைல்கள் மாயம்

அவர் பணியாற்றும் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள முக்கியமான கோப்புகள் அடிக்கடி மாயமாகி விடுவதாகவும், அதில் உள்ள அரசு தகவல்கள் கசிய விடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறு காணாமல் போகும் பைல்களை சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வால் திருடி அதில் கிடைக்கப் பெறும் வருவாயைக் கொண்டு எண்ணிலடங்கா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

வசதி

இந் நிலையில், அரசாங்க பைல்களில் உள்ள தகவல்களை திருத்தி ஏராளமான சொத்துகள் குவித்துள்ளார், இது குறித்து விசாரிக்க வேண்டும், அவர் மிகவும் வசதியாக உள்ளார் என்று கமிஷனர் யோகேஸ்வர் ராம் மிஸ்ராவுக்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து உரிய விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.

9 கார்கள், சொகுசு வீடு

விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு தலைசுற்றாத குறை. புகாருக்கு ஆளான சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வாலுக்கு இருக்கும் சொத்துகளே காரணம். மொத்தம் அவர் 9 சொகுசு கார்களை வைத்துள்ளார். ஸ்விட் டிசையர், மாருதி எர்டிகா, மகிந்தரா ஸ்கார்ப்பியோ, டொயோட்டா இன்னோவா, மகிந்தரா சைலோ உள்ளிட்ட கார்களும் அடக்கம்.

சகோதரர் சொத்து

இதுதவிர, சொகுசான, நவீன வசதிகள் கொண்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வீடுகளும் அவருக்கு உள்ளன. இவருக்கு தான் என்றில்லை... அவரது சகோதரர் உமாசங்கர் ஜெய்ஸ்வால், அவரது மனைவி, குழந்தை பெயரில் 3 சொகுசு கார்கள் இருக்கிறது. அனைவர் வைத்துள்ள சொகுசு கார்கள் பற்றிய விவரங்களை அனுப்புமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் போலீசார் கேட்டுள்ளனர்.

பணப்பரிமாற்றம்

தொடர் விசாரணையில் ஜெய்ஸ்வாலுக்கு ஏராளமான சொத்துகள் இருப்பது உறுதியாக, 5 ஆண்டுகளில் அவரின் வங்கிக் கணக்கில் நடந்த பணப்பரிமாற்றம் பற்றிய விவரங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நடவடிக்கை

உரிய விசாரணைக்கு பின்னரே அவருக்கான சொத்து மதிப்புகள் எவ்வளவு என்பது தெரிய வரும். அனைத்து விசாரணைகளின் முடிவில் ஜெய்ஸ்வால் மீது கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sivagiri
ஆக 20, 2024 12:51

இங்கே , ஆரம்ப காலத்தில் தலைவர் பிரச்சாரத்துக்கு சைக்கிள் ரிக்ஷா ஓட்டியவர் ,


ADVOCATE DALIT PRAVINA G MBBS BL
ஆக 18, 2024 00:05

ஜெய் ஸ்ரீ ராம்


Ramesh Sargam
ஆக 17, 2024 20:55

கூடிய சீக்கிரத்தில் இவன் ஒரு அரசியல் கட்சியை துவக்கி தேர்தலில் போட்டியிடுவான் பாருங்கள். அதற்கு தேவையான முழு தகுதி இவனுக்கு இருக்கிறது.


sankaranarayanan
ஆக 17, 2024 20:18

இதைவிட நமது மாநிலத்தில் மாபெரும் அயோக்கியத்தனம் செய்தவர் சாதிக் சகோதரர்கள் அவர்களால் சாதிக்க முடியாதது ஒன்றுமே இல்லை அரசியலில் இருந்து ஆதாயம்பெற்ற அவர்கள் செய்த அனைத்தும் விரைவிலேயே சாதிக்கின் சாதனைகள் என்று வெளிவரப்போகிறதாம் .


Ramesh Sargam
ஆக 17, 2024 20:14

எல்லாவற்றுக்கும் ஒரு சாமர்த்தியம் வேண்டும்.


என்றும் இந்தியன்
ஆக 17, 2024 18:50

ஆய்வு ஆராய்ச்சி விசாரணை இது ஒன்று தான் நடந்து கொண்டடேடேடேடே இருக்கும்.ஒரு தீர்வு வரவே வராது?அவ்வளவு கேவலமாக இந்திய அரசியல் ஆட்சி முறை நடக்கின்றது


வாய்மையே வெல்லும்
ஆக 17, 2024 18:10

ஏதேது பாடம் எடுப்பான் போல கீதே இந்த பலே திருடன்


MADHAVAN
ஆக 17, 2024 17:28

இவனுக்கு ஆதாரவ கருத்துபோடுவானுங்க, கேட்டா யோகி நல்லவன்னு சொல்லுவானுங்க


karupanasamy
ஆக 17, 2024 17:50

சாதிக் பாய் அண்ட் மேட்டர பேசுவோமா


வைகுண்டேஸ்வரன்
ஆக 17, 2024 16:25

நல்ல வேளை இந்த ஆள் இந்து. மாநிலம் உ. பி. இல்லைன்னா, இங்கே பல வாசகர்களும் பாக்கிஸ்தான், பலூசிஸ்தான் வரை இழுத்து எழுதியிருப்பார்கள். இப்போ கூட, திராவிடன் என்கிற பொய்யான பெயரில் திரியும் ஒரு ஐ டி தான் வாழும் சொந்த மாநிலத்தை அவமதித்து ஏதோ கிறுக்கி வெச்சிருக்கு. இவிங்க நமக்கு நாட்டுப்பற்று பத்தி வகுப்பு எடுத்து பேசுவாய்ங்க.


ஆரூர் ரங்
ஆக 17, 2024 17:19

ஆமா. கட்டூஸ் வகையறாக்கள் மாதிரி தடயமேயில்லாம மாட்டிகிடாம விஞ்ஞானபூர்வமா ஆட்டையப் போடக் கத்துக்கலை.


Balasubramanian
ஆக 17, 2024 15:05

இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் அரசியல் சாக்கடையில் ஏன் பலர் விழுந்து புரண்டு எழ உற்சாகம் காட்டுகிறார்கள் என்று


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை