உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணிடம் பாலியல் சீண்டல் வீடியோ: சட்டசபையில் முதல்வர் யோகி ஆவேசம்

பெண்ணிடம் பாலியல் சீண்டல் வீடியோ: சட்டசபையில் முதல்வர் யோகி ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.யில் சாலையில் தேங்கிய மழை நீரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டார். உபி.யில் பெய்த கனமழை காரணமாக உத்தர பிரதேசத்தின் லக்னோ அருகே கோமதி நகர் தாஜ் ஹோட்டல் பாலம் பகுதி மழைநீரால் மூழ்கியது. அவ்வழியாக ஆண் நண்பருடன் பைக் பின்னால் அமர்ந்து இளம் பெண் வந்து கொண்டிருந்தார்.அப்போது சில இளைஞர்கள் இளம் பெண் மீது நீரை எடுத்து ஊற்றியும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக கண்டனம் எழுந்தது.இது தொடர்பாக முதல்வர் சட்டசபையில் பேசியது, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர், கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சிலரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு என்றுமே முக்கியம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramar
ஆக 07, 2024 15:03

யோகி முதல்வர் அதற்கான வேலையை பார்த்து விட்டார். ஒரு ஆண் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பத்தில் உள்ள பெண்ணும் பாதிக்க படுகிறாள். குடும்பமே பாதிக்க படுகிறது. எல்லா இடத்திலும் பெயரை கெடுக்க ஆள் இருக்கிறார்கள் .


என்றும் இந்தியன்
ஆக 02, 2024 16:16

ஐயோ யோகி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு சுத்தமாக இல்லவே இல்லை, அவரது ஆட்சியை உடனே கலைக்கவேண்டும் மத்திய அரசு, அப்படி செய்யவில்லையென்றால் நாங்கள் பாராளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் கண்டனக்குரல் எழுப்புவோம் - இப்படிக்கு ராகுல் காந்தி என்று நாளை பேப்பரில் வந்தாலும் வரும். உண்மை : காங்கிரஸ் காசு கொடுத்து இதை செய்யச்சொன்னது என்று பிறகு தெரியும்


Indian
ஆக 02, 2024 14:44

பெண்களுக்கு ஆபத்தான மாநிலம் யாரும் அங்க போகாதீங்க ..


visu
ஆக 03, 2024 07:45

வராதீங்க என்று சொல்லுங்க நீங்க இருக்கும் இடம் எல்லாமே ஆபத்தான இடம்தான்


subramanian
ஆக 02, 2024 07:16

குற்றம் செய்த இளைங்கர்களுக்கு ஒரு வருடம் பொது கழிப்பறை சுத்தம் செய்யும் பணியை வழங்க வேண்டும்.


Sck
ஆக 02, 2024 05:49

பெண்கள் பாதுகாப்பு முக்கியம்தான், மறுக்கவில்லை. ஆனால், இல்லையே. அதானே இந்த நாட்டின் சாபகேடு. கடந்த 15-20 வருடங்களாக பெண்கள் மீது வன்கொடுமை பல மடங்கு அதிகரித்துள்ளது நம் நாட்டின் வெட்ககேடு.


அஜய் சென்னை இந்தியன்
ஆக 02, 2024 00:07

எனக்கு இவை எல்லாம் யோகி வின் பெயரை கெடுக்கவும், பாஜகவின் பெயரை கெடுக்கவும் எதிர் கட்சிகள் Plan பண்ணி செய்வதை போல் தோன்றுகிறது. அந்த இளைஞர்களை கைது செய்து CPI விடம் ஒப்படைத்து தீவிர விசாரணை செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்கள் குற்றம் செய்ய நினைக்க குட பயம் வரும் படி இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை