உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்தால் தான் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு: அமித்ஷா

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்தால் தான் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு: அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ 2019ல் பா.ஜ., அரசு ரத்து செய்தது. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பதன் மூலம், 370வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை, எதிர்த்தவர்களுக்கு, அமித் ஷா தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4வது கட்ட தேர்தலில், ஓட்டுப்பதிவு நடந்த ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 36.88 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. ஸ்ரீநகரில் 2019 லோக்சபா தேர்தலில் 14.43 சதவீதமும், 2014ல் 25.86 சதவீதமும், 2009ல் 25.55 சதவீதமும், 2004ல் 18.57 சதவீதமும் பதிவாகியுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

GMM
மே 14, 2024 15:12

காஸ்மீரில் வது தாற்காலிக பிரிவு வலுத்தவர்களுக்கு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு இது உலகில் எங்கும் இருக்க கூடாது ஓட்டு சதவீதம் அதிகரிப்பு வாக்காளர்கள் ஆதரவின் பிரதிபலிப்பு ஆக்கிரமிப்பு காஸ்மீர் விரைவில் இந்தியாவுடன் இணைத்து தேர்தல் நடத்த வேண்டும்


Tirunelveliகாரன்
மே 14, 2024 14:52

ஓகே அது முடிந்து விட்டது இப்போது நம் மக்களின் வாழ்வாதாரம் பற்றி பேசுங்கள் ப்ளீஸ்


Syed ghouse basha
மே 14, 2024 14:23

ஹஹஹ நீங்க சொல்வது உண்மை தான் அப்போ உங்களுக்கு அதிக ஆதரவு இருக்குமே? அப்போ நீங்க ஏன் போட்டியிட வில்லை?


Bala
மே 14, 2024 15:15

காஷ்மீரி மக்களின் மனங்களை வெல்லும்வரை பாஜக காத்திருக்கும்


Ramanujadasan
மே 14, 2024 15:17

இது ஜனநாயக நாடுங்க , எவரும் அவர்களுக்கு விருப்ப பட்ட இடங்களில் போட்டியிடலாம் இந்த இடங்களில் போட்டி போடுங்க என்று வற்புறுத்த முடியாது அது சரி நம்ம முதல்வர் தான் இந்த முறை புள்ளி வய்த்த கூட்டணி தான் இந்தியா முழுதும் வெற்றி பெரும் என்கிறாரே , அவரை வாரணாசியில் போட்டி போட சொல்லுங்க பார்ப்போம்


kirupanantham kanthimathinathan
மே 14, 2024 16:46

I SUPPORT MODI AND BJP BECAUSE OF YOU SIR YOU HATE THEM SO I SUPPORT THEM


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ