உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு

வக்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு

புதுடில்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, பார்லி., கூட்டுக்குழு அனுப்பப்பட்டது.முஸ்லிம்கள், மதம் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நன்கொடையாக அளிக்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகளை கண்காணிக்க, நிர்வகிக்க, மாநிலங்களில் வக்பு வாரியங்களும், தேசிய அளவில் வக்பு கவுன்சிலும் உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yjvml2b5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தவிர, வக்பு தீர்ப்பாயமும் உள்ளது. வக்பு வாரிய சட்டம், 1995ன்படி வக்பு சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக பல விதிகள் உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2013ல், இதில் பல விதிகள் தளர்த்தப்பட்டு, தாராளமயமாக்கப்பட்டது.தற்போது நாடு முழுதும், 9.4 லட்சம் ஏக்கர் பரப்புள்ள, 8.7 லட்சம் சொத்துக்கள் வக்பு வாரியங்களிடம் உள்ளன. வக்பு சொத்துக்கள் நிர்வாகத்தில் பல முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், மத்திய அரசு புதிய மசோதாவை லோக்சபாவில் மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் நடந்தது. காங்கிரஸ்,சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

நிறுத்துங்கள்

மசோதாவை ஆதரித்து கிரண் ரிஜிஜூ பேசியதாவது: இந்த மசோதா மூலம் எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது. யாருடைய உரிமையையும் இது பறிக்காது. உரிமைகளைப் பெறாதவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்ப்பதை நிறுத்துங்கள். யார் எதிர்த்தாலும் , யார் ஆதரித்தாலும் சரி இது வரலாற்றில் இடம்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

மசோதாவில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:

*குடும்ப சொத்துக்களில் முஸ்லிம் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் *வக்பு சொத்துக்களை, சர்வே கமிஷனர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அல்லது கலெக்டரால் நியமிக்கப்படும் துணை கலெக்டர் ஆய்வு செய்வர் *மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களில், முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவது உறுதி செய்யப்படும் *போராக்கள் மற்றும் அகாகானிஸ்களுக்கென தனி வாரியம் அமைக்கப்படும் வக்பு வாரியங்களில், சன்னி, ஷியா, போரா, அகாகானிஸ் மற்றும் அந்த மதத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடம்பெற வேண்டும் *வக்பு சொத்துக்கள் அனைத்தும், பொதுவான மத்திய தளத்தின் வாயிலாகவே பதிவு செய்ய வேண்டும். அதன் தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும் *சொத்து பதிவு செய்யப்படுவதற்கு முன், வருவாய் சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும். மேலும் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்படும் *வக்பு சொத்துக்களுக்கு, இனி வக்பு வாரியங்கள் மட்டுமே அதிகாரம் உடையதாக இருக்காது *வக்பு வாரியச் சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் தொடர்பான தகவல்கள், அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய தளத்தில் பதிவிட வேண்டும் *தீர்ப்பாயம் முறை திருத்தி அமைக்கப்படும். மேலும் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும். இவ்வாறு வக்பு சொத்து நிர்வாத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் பல திருத்தங்கள் புதிய மசோதாவில் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டுக்குழு

மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பெரும்பான்மையானோர் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பி பரிசீலனை செய்ய வலியுறுத்தினர். இதனையடுத்து வக்பு சட்டத்திருத்த மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Dharmavaan
ஆக 08, 2024 19:49

அரராஜகமான அநீதியான சட்டம் வக்ப் அதிகாரத்திற்கு அதிகாரம் .ஹிந்து துரோகிகள் காங்கிரஸின் அடாவடி சட்டம்.இதுவரை சேர்த்த சொத்துக்களுக்கு பொருந்துமா?


J.V. Iyer
ஆக 08, 2024 16:59

திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். ஹிந்துக்களின் நிலங்கள் சுரண்டப்படுவதை பார்த்துக்கொண்டு யார் சும்மா இருப்பார்கள்?


Mohan
ஆக 08, 2024 16:18

சிலரது கருத்துக்களை மட்டும் பிரசுரிப்பது ஏன்?? எந்த தவறான வார்த்தைகளும் இல்லாத கருத்துக்களை எழுதும் உண்மையான விலாசம் கொண்டவர்களை மதியாது இருப்பது சரியல்ல. விடியல் ஆட்கள் தவறாக எழுதினாலும் பிரசுரிக்கும் நீங்கள் செய்வது முற்றிலும் தவறு. வெல்கம்..மோஹன் என்று பெயர் வந்தும் கூட டிரை எகெய்ன் என்று வருவது எனக்கு அவமதிப்பாக உள்ளது.


கனோஜ் ஆங்ரே
ஆக 08, 2024 17:11

அடேய், சோனமுத்தா... போச்சா.... ரெண்டு காதும் ங்கொய்..னுமே...?


nagendhiran
ஆக 08, 2024 16:09

ஐயப்பன் கோவிலில் பிரச்சனை வரும் போது? தனி மனித சுதந்திரம்? பெண் உரிமை கூவனவனுங்க இப்போ அப்படியே மாற்றி கூவுறானுங்க?


Balasubramanian
ஆக 08, 2024 15:52

அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது! எதிர் கட்சிகள் பேச வேண்டியதை பேசலாம் ! இரு சபையிலும் தீர்மானம் நிறைவேற்ற படும்! பிறகு ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பிறகு சட்டம் ஆகும்! அவ்வளவு தானே! இதில் என்னய்யா சிக்கல்


venugopal s
ஆக 08, 2024 15:46

சாதாரண பொது மக்களின் சொத்துரிமையை துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரங்களை புதிய சட்டங்களின் மூலம் முறைப்படுத்த வேண்டியது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். காஷ்மீரின் ஸ்பெஷல் அந்தஸ்தை ஆர்ட்டிகிள் 370 ஐ நீக்கிய பின்னர் மத்திய பாஜக அரசு செயல்படுத்தவுள்ள உருப்படியான விஷயம் இது தான்! பாராட்டுகள்!


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 14:18

Waqf Act, in the Congress regime ..... A Tool given to Waqf Boards to snatch the property of Hindus ..........


SS
ஆக 08, 2024 14:18

வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவரை நியமிக்க இந்த திருத்தம் வழிவகை செய்கிறது. பிற மதங்களுக்கான அமைப்புகளிலும் இதை செயல்படுத்துங்கள்.


ஆரூர் ரங்
ஆக 08, 2024 14:38

முகலாயர்கள் பிற சமய நிறுவனங்களின் சொத்துக்களை கைப்பற்றி தங்களது மத நிறுவனங்களுக்கு அளித்தது உண்மைதானே? சர்ச்களுக்கு ஆங்கிலேயர் அளித்த நிலங்கள் அவர்கள் உழைத்து சம்பாதித்த சொத்தா? மூலப் பத்திரங்களே இல்லாமல் தன்னிச்சையாக வஃக்பு அறக்கட்டளைக்கு சொத்து எழுதி வைத்தால் அது செல்லும் என காங்கிரஸ் கொண்டு வந்த சட்டம் நியாயமா?


N Sasikumar Yadhav
ஆக 08, 2024 14:46

USUS தமிழக இந்துசமய துரோகத்துறையில் அனைத்து மதத்தினரும் இருக்கிறார்கள். இதை கேட்க முடியாத சிலர் வக்ப்க்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது வக்பால் தமிழகத்தில் கண்ணுக்கு தெரிந்து ஒரு கிராமமே பாதிக்கப்பட்டிருக்கிறது கண்ணுக்கு தெரியாத இன்னும் எவ்வளவோ


ஆரூர் ரங்
ஆக 08, 2024 14:55

எத்தனையோ ஆலய சொத்துக்களில் சிறுபான்மையினர் வசித்துக் கொண்டு வியாபாரமும் செய்கிறார்கள். அதனை என்ன செய்ய?


காஷ்மீர் கவுல் பிராமணன்.
ஆக 08, 2024 15:37

அப்போ முஸ்லீம் அல்லாதவர் வசிக்கும் நாட்டை விட்டு முஸ்லீம்கள் மட்டுமே வசிக்கின்ற நாட்டிற்க்கு சென்றுவிடுங்கள்.


Suppan
ஆக 08, 2024 16:39

ஹிந்து அறநிலையத்துறையில் எவ்வளவு க்ரிப்ட்டோக்கள் உள்ளார்கள் என்று எல்லோருக்குமே தெரியுமைய்யா . அதை இதுவரை தமிழக அரசு தடுத்துள்ளதா ?


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 14:15

கவனிக்கவும், வக்ஃப் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எந்த நீதிமன்றமும், ஏன் உச்ச நீதிமன்றமும் கூட மாற்ற முடியாது ....


Sainathan Veeraraghavan
ஆக 08, 2024 17:56

நீதி மன்றங்கள் மாற்ற முடியாது எனப்படும் சட்டங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. கட்டாயம் மாற்றவேண்டும். பிஜேபி வாழ்க


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 14:11

எளிமையாகச் சொன்னால், முஸ்லீம் அறக்கட்டளையின் பெயரில் சொத்துக்களைக் கோர வக்ஃப் வாரியத்திற்கு வரம்பற்ற அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இது எப்படிச் சரியாகப் பட்டது என்பதைப் புரிந்து கொள்ள, நாம் வரலாற்றின் பக்கங்களைப் புரட்ட வேண்டும். உண்மையில், பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பிறகு இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், பாகிஸ்தானில் உள்ள அவர்களது சொத்துக்கள் முஸ்லிம்களாலும், பாகிஸ்தான் அரசாங்கத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லிம்களின் நிலத்தை இந்திய அரசு வக்பு வாரியங்களுக்கு வழங்கியது. அதன் பிறகு 1954 ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1995 ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தை மாற்றி வக்பு வாரியங்களுக்கு நிலம் கையகப்படுத்த வரம்பற்ற உரிமை வழங்கப்பட்டது. அதன் பிறகு வக்பு வாரியத்தின் சொத்துக்கள் அதிகரித்தன. இந்தியாவின் வக்ஃப் மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி, தற்போது மொத்தம் 8,54,509 சொத்துக்கள் வக்ஃப் வாரியங்களுடன் எட்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளன. ராணுவம் மற்றும் ரயில்வேக்கு அடுத்தபடியாக பெரும்பாலான நிலங்கள் வக்பு வாரியத்திடம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை