உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெரிஞ்சுக்கோங்க...! வக்பு சட்டத் திருத்த மசோதா சொல்வது என்ன?

தெரிஞ்சுக்கோங்க...! வக்பு சட்டத் திருத்த மசோதா சொல்வது என்ன?

புதுடில்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, பார்லி., கூட்டுக்குழு அனுப்பப்பட்டது. 1995, வக்பு வாரிய சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் திருத்தம் செய்யப்பட்டு இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட முக்கிய அம்சங்கள்

* பழைய சட்டத்தின்படி, அத்தகைய முடிவுகள் வக்பு தீர்ப்பாயத்தால் எடுக்கப்பட்டன. இந்த அதிகாரத்தை சொத்துக்களை அபகரிப்பதாகவும், தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட கலெக்டரே தீர்மானிக்கலாம். * முன்பு, வாரியமே சொத்துக்களை நிர்வகிக்க முடியும். ஆனால் தற்போது, வாரியங்கள் சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது.* வக்பு வாரியத்தின் முடிவுகளை எதிர்த்து கோர்ட்டில் முறையீடு செய்ய முடியாது; வக்பு தீர்ப்பாயத்தில்தான் முறையிட முடியும். இனிமேல், வக்பு வாரியத்தின் உத்தரவுகளை எதிர்த்து கோர்டில் முறையிடலாம்.* வாரியத்திற்கே சொத்துக்களுக்கான உரிமை இருந்தது. அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, சொத்துக்களுக்கு வாரியம் உரிமை கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.* மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களில் பெண்களுக்கு அனுமதியில்லை. புதிய சட்டத்திருத்தின்படி, மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவர்.* சொத்துக்களை, வக்பு தீர்ப்பாயமே ஆய்வு செய்யும். ஆனால், இனி சொத்துக்களை சர்வே கமிஷனர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அல்லது கலெக்டரால் நியமிக்கப்படும் துணை கலெக்டர் ஆய்வு செய்வர்.* இதுவரை வக்பு வாரிய குழுவில் 3 முஸ்லிம் எம்.பி.,க்கள் இடம்பெற்றிருப்பர். புதிய விதிகளின்படி, 3 எம்.பி.,க்கள் கொண்ட அந்த குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெற்றிருப்பர்.* வக்பு சொத்துக்களை விற்க முடியாது என்ற சூழல் இருந்த நிலையில், இனி சொத்துக்கள் அனைத்தும், பொதுவான மத்திய தளத்தின் வாயிலாகவே பதிவு செய்ய வேண்டும். * வக்பு சொத்துக்களை வாரியமே நிர்வகித்து வந்த நிலையில், புது விதிகளின்படி, வக்பு சொத்துக்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும்.* சொத்துக்களை பதிவு செய்வதில் வருவாய் சட்டங்கள் பொருந்தாது என்ற நிலை இருந்துவந்தது. தற்போது, சொத்து பதிவு செய்யப்படுவதற்கு முன், வருவாய் சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.* முன்பு, வக்பு வாரியச் சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் தொடர்பான தகவல்கள் பதிவிட வேண்டியதில்லை. இனி, வருவாய் தொடர்பான தகவல்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய தளத்தில் பதிவிட வேண்டும்.* போராக்கள் மற்றும் அகாகானிகளுக்கென தனி வாரியம் இல்லை. அவற்றில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, புது விதிகளின்படி போராக்கள் மற்றும் அகாகானிகளுக்கென தனி வாரியம் அமைக்கப்படும். வக்பு வாரியங்களில், சன்னி, ஷியா, போரா, அகாகானிஸ் மற்றும் அந்த மதத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் இடம்பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Bharathi
ஆக 09, 2024 10:42

Not enough must enforce an endowment by central government and HR


தரணிராஜ்
ஆக 09, 2024 08:37

இதே மாதிரி உத்தரவை இந்து மடங்களுக்கும் போடணும். செய்வாங்களா?


Nandakumar Gopalan
ஆக 09, 2024 09:24

இது ஹிந்துஸ்தான். பாக்கிஸ்தான் அல்ல.


spr
ஆக 09, 2024 08:15

மோடி அரசு பாராட்டப்பட வேண்டும் இதுதான் மதச்ச்சார்பின்மை குறித்துப் பேசும் அனைத்து அரசுகளும் செய்ய வேண்டிய ஒன்று நாட்டின் சட்டம் நல்லதோ கெட்டதோ அனைத்து மக்களுக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் இதனை அண்ணாமலை போன்றோர் மக்கள் அறிய விளக்கமாகச் சொல்ல வேண்டும்


Suppan
ஆக 08, 2024 21:31

மேற் கொண்டு உள்ள விஷயங்களை விட்டுவிட்டீர்கள். வக்ப் வாரியத்தில் பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும் இடம் பெறவேண்டும். இந்த ஷரத்துக்களுக்கும் இந்தி கூட்டணி எதிர்ப்பு. வழக்கில் ஒருதரப்பினரே நீதிபதியாகவும் இருப்பார்களாம் . நல்லா இருக்கு உங்க நியாயம் . இந்த மாதிரியான பித்துக்குளித்தனமான விஷமத்தனமான சமாச்சாரங்களைக் கொண்டு வந்த காங்கிரசை என்ன செய்யலாம் ?


Venkatesan Srinivasan
ஆக 12, 2024 08:25

தயவுசெய்து "இண்டி" கூட்டணி என்று மட்டும் குறிப்பிடவும். கான்கிராஸ் மற்றும் அதன் கூட்டு கும்பல் நாட்டின் பெரும்பான்மை மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க வழி வகுத்து கொடுத்தது. பாகிஸ்தான் பிரிவினை மதவாத அடிப்படையில் மட்டுமே நிகழ்ந்தது என்ற உண்மையை பெரும்பான்மை இந்து மக்கள் உணராத வரை விமோசனம் இல்லை. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


Anonymous
ஆக 08, 2024 20:43

என்ன, அந்த மதத்தில் கூட பிற்படுத்தப்பட்ட என்று ஒரு பிரிவு உண்டா? அப்ப ஜாதி பாகுபாடு பார்ப்பது ஹிந்துக்கள் மட்டும் தான்னு திராவிட கட்சிகள் இவளோ நாளா சொல்றது எல்லாம் "உருட்டா?"


Ram
ஆக 08, 2024 20:25

மிகவும் அவசியமான ஒன்று , வெளிப்படைத்தன்மை இல்லையென்றால் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது


Natarajan V
ஆக 08, 2024 21:31

ஆமாம். அப்படி பி.எம். கேர் ஃபண்ட் பத்தியும் வெளிப்படையாக கையாண்டு இருக்கலாம். RTI ல கூட கேட்கமுடியாதபடி பண்ணிட்டிங்களே ராசா....


தமிழ்வேள்
ஆக 08, 2024 19:52

இவற்றை அனைத்து மொழிகளிலும் அனைத்து பத்திரிகைகளிலும் கட்டாய விளம்பரமாக வெளியிட வேண்டும்..... இஸ்லாத்தின் பாரபட்சம் மற்றும் ரெண்டும் கெட்டான் தனம் எல்லோருக்கும் குறிப்பாக திராவிட டுபுக்குகள் ஹிந்து நடுநிலை நக்கி களுக்கு மண்டையில் ஏறும் வரை தொடர்ந்து வெளியிடவேண்டும்


Duruvesan
ஆக 08, 2024 19:29

இதெல்லாம் முக்கியமே இல்லை, ஒருத்தன் 2 கு மேல பெத்துக்கிட்டா ஜெயில் னு சட்டம் போடுங்க, ஹிந்துவையும் சேர்த்து


Duruvesan
ஆக 08, 2024 19:25

G square ஹாப்பி


Swaminathan Ctc
ஆக 08, 2024 19:07

Indian,satame,anaivarukum,potuvanathu,than,,,


மேலும் செய்திகள்







புதிய வீடியோ