உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?

வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டிலும் வெற்றிப்பெற்று எம்.பி.,யாக தேர்வான நிலையில், ஏதேனும் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ajm9jn9l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரேபரேலி, வயநாடு தொகுதி மக்களை சந்தித்து தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறிவிட்டு, 'இவற்றில் எதை விடுவது எனத் தெரியவில்லை' என ராகுல், வெளிப்படையாகவே கூறியிருந்தார்.இந்த நிலையில், வயநாடு தொகுதி மூலம் தேர்வான எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன், ''தேசத்தை வழிநடத்த வேண்டிய இடத்தில் ராகுல் இருக்கிறார். அதை புரிந்துகொண்டு ராகுலுக்கு கேரள மக்கள் வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்க வேண்டும்'' என சூசகமாக தெரிவித்தார்.கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் நின்ற ராகுல், வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றிப்பெற்று எம்.பி., ஆனார். ஆனால் தற்போது ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் வென்று, வயநாடு தொகுதியை கைகழுவுகிறார். வயநாட்டில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

spr
ஜூன் 13, 2024 14:22

"உப்பு சப்பில்லாத காரணங்களுக்கு வணக்கம் எல்லாம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யும் நீதிமன்றங்கள்.... இதை ஏன் வழக்காக எடுக்க கூடாது..... ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமெ போட்டியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்ட வேண்டும்." பாராட்டப்பட வேண்டிய கருத்தே இதனை ஒரு பொதுநல வழக்காக மட்டுமே முன்னெடுக்க வருவார் அடுத்த தேர்தலுக்கான முழுச் செலவையும் காங்கிரஸ் ஏற்க வேண்டும்


பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 07:51

உப்பு சப்பில்லாத காரணங்களுக்கு வணக்கம் எல்லாம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யும் நீதிமன்றங்கள்.... இதை ஏன் வழக்காக எடுக்க கூடாது..... ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமெ போட்டியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்ட வேண்டும்.... மக்களின் வரிப்பணம் வீணாக போகாது.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 13, 2024 00:29

வயநாட்டில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 13, 2024 00:25

பபூன் ஆக இல்லாமல் ஒரு உருப்படியான எம் பி யை இந்த முறையாவது தேர்ந்தெடுக்க வயநாடு வாக்காளர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு .......


Sivakumar
ஜூன் 12, 2024 23:52

இதே கருத்தை ஒருவர் வாரணாசியில் குஜராத்திலும் போட்டியிட்டபோது சொல்லவில்லையே


N Sasikumar Yadhav
ஜூன் 13, 2024 07:41

மோடிஜி ஒருமுறைதான் நின்றார் ஆனால் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் அப்படியில்லை


பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 07:54

அவர் இப்போது ஒரு தொகுதியில் மட்டும் தானே போட்டியிட்டார்.. ஆனால் மக்களின் வரிப்பணம் வீணாக போகிறது என்று அரசுக்கு உபதேசம் செய்த பப்பு அந்த செயலை செய்ய கூடாது அல்லவா.... ஊருக்கு தான் உபதேசம் போல ???


vadivelu
ஜூன் 12, 2024 22:46

பிரியங்காவை. நிறுத்துங்க, காண்டீனுக்கு இன்னொரு ஆளை அனுப்புங்க.


Ramesh Sargam
ஜூன் 12, 2024 21:29

எம்பியாக தொடர்வதாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.


Sivakumar
ஜூன் 13, 2024 00:39

பிரதமராக தொடருபவராலும் என்போன்ற சாமானிய மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை


sankaranarayanan
ஜூன் 12, 2024 20:29

இரண்டு இடங்களில் நின்று தேர்தலில் வெற்றிபெறும் நபர்கள் மறுதேர்தல் நடக்கும் தொகுதியில் ஆகும் முழு செலவுகளையும் அவரே ஏற்க வேண்டும் வீணாக மக்கள் பணம் மறு தேர்தலுக்கு செலவு செய்யக்கூடாது. அதற்கு ஏற்றவாறு தேர்தவிதிகளை மாற்றி அமைக்கவேண்டும்.


hariharan
ஜூன் 12, 2024 20:29

மோடி என்றால் திருடன் என்று சொன்னதற்கு உள்ள தண்டனை நிறுத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜாமினில் இருக்கிறார். எங்கே போனாலும் துரத்தும்.


Ravi Kumar
ஜூன் 12, 2024 19:50

பப்பு தீராத விளையாட்டு பிள்ளை . 54 வயது .........


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ