உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழைகளுக்கு வழங்குவோம்: மோடி அதிரடி பேச்சு

ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழைகளுக்கு வழங்குவோம்: மோடி அதிரடி பேச்சு

திருவனந்தபுரம்: ''மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழை மக்களுக்கு வழங்குவோம்'' என கேரளாவில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நேற்று மலையாள புத்தாண்டு தினமான விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நேரத்தில் கேரள மக்களின் ஆசிர்வாதங்களை பெற்றுள்ளேன். நேற்று பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3bod651l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை என்றால் மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதத்தின் கீழ் இந்தியா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மையமாக மாறும், விண்வெளித் துறையில் ககன்யான் போன்ற மறக்க முடியாத சாதனைகளை இந்தியா படைக்கும், விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மான் நிதி தொடர்ந்து கிடைக்கும்.அதுமட்டுமல்லாமல் ஏழைகளுக்கு 3 கோடி புதிய வீடுகளும் கட்டப்படும், 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். சுயஉதவி குழுக்களுடன் தொடர்புடைய சுமார் 10 கோடி பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுலா மற்றும் சில்லறை வணிகம் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படும். ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏழை மக்களுக்கு வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Azar Mufeen
ஏப் 16, 2024 13:19

அதெப்புடி உங்க கட்சில சேர்ந்தவுடேனதான் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள் அவர்களின் பணமும் புனிதமாகிவிடுகிறது


அப்புசமி
ஏப் 16, 2024 10:35

அந்த பாஞ்சி லட்சமே பெறும் தல. இன்னும் செலவழிச்சு முடியலை.


Palaniswamy Kandaswamy
ஏப் 16, 2024 08:23

பத்து வருடம் ஏமாந்தோம். இனியும் ஏமாற மாட்டோம்


venugopal s
ஏப் 15, 2024 22:22

அந்த இரண்டு ஏழைகள் தானே?


தமிழன்
ஏப் 15, 2024 19:09

நூறு சதவீத வாக்கு பதிவுக்கு உத்திரவாதம் கொடுக்க சொல்லுங்க பார்க்கலாம் இன்னுமா உங்களை நம்புறீங்க


Sethuraman Kumaresan
ஏப் 15, 2024 18:50

Dont fooled People First give lacs before


raguram
ஏப் 15, 2024 17:11

வேறு எந்த கேரண்டியும் வேண்டாம் அந்தந்த மாநில ஊழல்வாதிகளின் சொத்துகளை அந்த மாநில மக்கள் எல்லோருக்கும் கொடுக்க வழி செய்யுங்கள் தேர்தலுக்கு முன் ஒரு மாநிலத்திலாவது நிறைவேற்ற வழி செய்தால் சதம் வெற்றி உங்களுக்குதான்


Prasath
ஏப் 15, 2024 16:50

ji ,Could you Pls release the PM care fund statement


thangavel
ஏப் 15, 2024 16:48

ithanai naatkal enna seithu kondu irundheerkal prathamare


முருகன்
ஏப் 15, 2024 16:44

பத்து வருடங்களில் ஊழல் பணத்தில் எத்தனை ஏழைகளுக்கு லட்சம் வேண்டாம் ஆயிரத்தில் கெடுத்து இருக்கிறிர்கள் என சொல்ல முடியுமா இனியும் மக்களை ஏமாற்ற முடியாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை