உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் என பலருக்கு பெயர் இருந்தால் என்ன செய்ய முடியும்? தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

ராகுல் என பலருக்கு பெயர் இருந்தால் என்ன செய்ய முடியும்? தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: ஒரே பெயரை கொண்டவர்கள் பலர் ஒரே தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், அரசியல் தலைவர்களின் பெயர்களை வைத்ததற்காக அவர்களை போட்டியிட தடை விதிக்க முடியாது எனக்கூறியுள்ளது.

பொது நல மனு

பாபு ஸ்டீபன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‛‛ முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களை குழப்பும் வகையில், ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். இதனால், முக்கிய பரமுகர்கள் குறைந்தளவு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடையும் அபாயம் உள்ளது. நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடக்கும் வகையில், இந்த நடைமுறையை நிறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் '' எனக்கூறியிருந்தார்.

அனுமதி

இதனை விசாரித்த நீதிபதி பிஆர் கவாய், ராகுல் அல்லது லாலு பிரசாத் என குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெயர் வைத்தால், அவர்களை தேர்தலில் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு அனுமதி வழங்கினர்.

5 பேர்

ஏப்.,19 ல் தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பல்லவி
மே 03, 2024 21:56

கோத்ரா சம்பவ ஜாம்பவான்கள் இருவரும் மறைவதற்கு கோழி கூடுகள் தேடுவதாக காற்றில் வந்த சேதி


தமிழ்வேள்
மே 03, 2024 21:38

அல்லது ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட பாடல் சொக்க வைக்கும் சோனியா என்று வெளியே வந்தபோது அது தங்கள் கட்சியின் தலைவி புகழைக்கெடுப்பதாக கூறி பாடலுக்கு தடை கேட்டு கோர்ட்டில் முறையிட்ட அடிமை கும்பல் தான் இது


Shekar
மே 03, 2024 19:51

யுவர் ஆனர், ராகுல், ப்ரியங்கா அப்படின்னு எங்கள் இளவரசர், இளவரசிக்கு போட்டியாய் பெயர் வைத்திருப்போர் எல்லோரையும் நாடு கடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்


M Ramachandran
மே 03, 2024 19:43

அது மாதிரி அரை வேக்கட்டு தருதலை தலைவர் களை என்ன செய்வது சூதும் வாதும் வேதனை தரும் நேரிடையாகா மோத திராணியற்று செய்வினை செய்ய கேராளா சென்ற ஒரு மனித உருவில் இருக்கும் மிருகம்


கல்யாணராமன்
மே 03, 2024 18:57

பதிவான வாக்குக்களில் ஒரு சதவீதத்திற்கு குறைவாக வாக்கு வாங்கினால் ஓர் ஆண்டு சிறை தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தால் சரியாக இருக்கும்


Vathsan
மே 03, 2024 19:45

பாஜகவில் பாதி பேரு சிறையிலே தான் இருக்கணும்


Suriyanarayanan
மே 03, 2024 18:10

எந்த தேர்தல்கள் வந்தாலும் ஒருவர் ஒரு இடத்தில் மட்டும் போட்டி இடவேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் கொண்டு வரவேண்டும் இரு இடங்களில் ஒருவரே நின்று அந்த ஒருவரே வெற்றி பெற்றால் ஒரு இடத்தை ராஜினாமா செய்வது மக்கள் வரிப்பணம், அதிகாரிகளின் நேரம் எல்லாம் வீணாகிறது இதை தேர்தல் ஆணையம் முக்கியமானது கவனிக்க வேண்டும் ?❤️


Vathsan
மே 03, 2024 19:47

மோடி ல் வாரணாசி, வதோதரா ஆகிய இடங்களில் நின்றார் வடோதராவை ராஜினாமா செய்தார் தேர்தல் ஆணையம் இந்த மாதிரி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்


J.V. Iyer
மே 03, 2024 17:14

முதலில் இப்படி பிறகு வேறு யாரும் போட்டியிடக்கூடாது என்று நீதி மன்றத்திற்கு போவார்கள் பிறகு, இவர்களுக்கு மட்டும்தான் வோட்டளிக்கவேண்டும் என்று புலம்புவார்கள் அப்புறம் என்ன? தத்தி ராஹுல்தான் போர்கிஸ்தானின் பிரதமர்


Vathsan
மே 03, 2024 19:48

முதலில் என்ன நியூஸ் னு ஒழுங்கா படி


subramanian
மே 03, 2024 16:58

எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன இது போன்ற வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள கூடாது


Dharmavaan
மே 03, 2024 16:54

ராகுல்கான் என்றாலே சட்டமுள்ளவளைய வேண்டும் என்ற அடிமை புத்தி இன்னும் விலகவில்லை கேவலம் என்ன தியாகம் செய்துவிட்டான் ராகுல்கான் நாட்டிற்காக


Vathsan
மே 03, 2024 19:49

ராஹுல்ன்னு பேர பாத்தாலே ஆட்டிட்டு வர வேண்டியது என்ன நியூஸ் னு ஒழுங்கா படி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை