உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  செயற்கை நுண்ணறிவின் யுகத்தில் தர்மத்தின் நிலை என்ன: சிருங்கேரி ஆச்சார்யரின் விளக்கம்

 செயற்கை நுண்ணறிவின் யுகத்தில் தர்மத்தின் நிலை என்ன: சிருங்கேரி ஆச்சார்யரின் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே வழியே தவிர, வேறு வழி இல்லை ,” என சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் விளக்கினார். புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் ஸ்ரீ சுவாமிகள், நேற்று மஹாவீர் பிரசாத் ஜயபூர்யாவின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். ஸ்ரீ சுவாமிகளின் அருளுரையைக் கேட்க, பக்தர்கள் குழுமியிருந்தனர். பா.ஜ., - எம்.பி.,யும், பிரசாரகருமான டாக்டர் சுதான்ஷு த்ரிவேதி, ''செயற்கை நுண்ணறிவு ஆட்சி செய்யும் யுகத்தில், மக்கள் நலமா கவும் மகிழ்ச்சியாகவும் வாழும் நிலையில், 'தர்மத்தின் நிலைதான் என்ன?' எனும் மன நிலையில் மக்கள் உள்ளனரே...,'' என்ற சந்தேகத்தை முன்வைத்தார். அது குறித்து, ஸ்ரீ சுவாமிகள் கூறியதாவது: ஒரு கேள்வி கேட்போம்... செயற்கை நுண்ணறிவு வருவதற்கு முன்பே, இவ்வுலகில் சந்தோஷமும், துக்கமும் இருந்ததே... அது போல, செயற்கை நுண்ணறிவு காலத்திலும் சந்தோஷமும், துக்கமும் உண்டு. ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க, மற்றவர் துன்பப்படுகிறார். அதற்கு காரணம், அவர்கள் முந்தைய பிறவிகளில் செய்த தர்மமும், அதர்மமுமே! தர்மமும், அதர்மமும், ஒருபோதும் இடமாற்றம் பெறவில்லை. எது நேற்று தர்மமோ, அதேதான் இன்றும் தர்மம்; நாளையும் அது தான் தர்மம். இதுவே நிலையானது. தர்மமில்லாத வாழ்க்கையிலும் சிலர் மகிழ்ச்சியாக வாழ்வது போலத் தோன்றும்; ஆனால் அது தற்காலிகம். ஒருவர், சிறந்த வேலை செய்து, நன்றாக சம்பாதித்து, பிறகு வேலையை இழந்தாலும், பழைய சம்பாதிப்பின் கையிருப்பு மூலம், சில ஆண்டுகள் பழைய வசதியோடு வாழ முடியும். ஆனால் புதிய வேலை கிடைக்காவிட்டால், கடின நிலைகள் உருவாகும். அதுபோல, புண்ணியம் இருக்கும் வரை இன்பம் தொடரலாம்; ஆனால் அது முடிந்தவுடன், துன்பம் ஆரம்பமாகும். எனவே, ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பது தான் ஒரே வழியே தவிர, வேறு வழியே இல்லை. இவ்வாறு ஸ்ரீ சுவாமிகள் அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை