உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உரிகம் ரயில்வே பாலம் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும்?

உரிகம் ரயில்வே பாலம் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும்?

தங்கவயல்':தங்கவயலின் இதய பகுதியாக விளங்கும் உரிகம் ரயில் நிலையம் அருகில் ரயில்வே பாலம் அமைக்கும் திட்டம் எப்போது நிறைவேறும் என தெரியவில்லை.கோலார் மாவட்டத்தில், ரயில்வே திட்டப் பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாயில் திட்டம் நிறைவேற்றப்பட்டதாககோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமி தெரிவித்தார்.உரிகம் ரயில் நிலையம் அருகில் மேம்பாலம் ஏற்படுத்துவதாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கூறி வரும் நிலையில், அந்த திட்டம் இதுவரை நிறைவேறவே இல்லை.இதனால், ரயில்கள் வந்து செல்லும் போது உரிகம் ரயில்வே கேட் மூடப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். மேம்பாலம் திட்டத்துக்கு மாற்றாக சுரங்கப் பாதை அமைக்க உள்ளதாகவும் ஆய்வு செய்தனர். பின்னர் அதையும் கைவிட்டனர்.உரிகம் ரயில் நிலையம் தான், கென்னடிஸ், மில், பிளாக், டாப்லைன், பேண்டுலைன், என்.டி.பிளாக், ஈ.டி.பிளாக், டபிள்யு.டி. பிளாக், எஸ்.டி.பிளாக், மலையாளி லைன், அம்பேத்கர் நகர், ராபர்ட்சன் பேட்டை மற்றும் பாரண்டஹள்ளி பகுதிகளுக்கு செல்ல பயன்படும் முக்கிய ரயில் நிலையம் ஆகும். இங்கு பாலம் அவசியம் தேவை என்பதை பலமுறை பலர் தெரிவித்தும் கூட, நடவடிக்கை எடுத்த பாடில்லை. 150 ஆண்டுகால பழமையான உரிகம் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி மட்டும் தற்போது நடந்து வருகிறது. ஆனால் பாலம் அமைக்க மட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை.அடுத்த ரயில்வே பட்ஜெட்டிலாவது இதற்கு விடிவுகாலம் பிறக்குமா என்பது மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை