உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீங்கள் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் எங்கே?: மோடிக்கு கார்கே கேள்வி

நீங்கள் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் எங்கே?: மோடிக்கு கார்கே கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம், வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் மீட்பு, விவசாயிகளின் இரட்டிப்பு வருமானம் என முந்தைய தேர்தல்களில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளின்படி, அந்த பணம், இரட்டிப்பு வருமான எங்கே என காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக கேரளாவில் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவர் எப்போதும் காங்கிரசை விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை என கூறிவரும் அவர், பிறகு எதற்காக எங்கள் கட்சியை பற்றி கவலைப்பட வேண்டும்? வெற்றிப்பெறுவோம் என பா.ஜ.,வுக்கு அதிக நம்பிக்கை இருந்தால், எதற்காக ஊழல்வாதிகளை பா.ஜ., கட்சியில் சேர்க்கிறீர்கள்? அவர்கள் காங்கிரசிலோ அல்லது வேறு ஏதாவது கட்சியிலோ இருந்தால் அவர்களை பெரிய ஊழல்வாதிகள் எனக் கூறுவார்கள். நரேந்திர மோடி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார்; காங்கிரஸ் கட்சியினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவேன் என்றார். அந்த பணமெல்லாம் எங்கே? அடுத்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கூறினார். விவசாயிகளின் இரட்டிப்பு வருமானம் எங்கே? தற்போது மோடியின் கியாரன்டி என பேசி வருகிறார். தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதே மோடியின் கியாரண்டி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

A1Suresh
ஏப் 24, 2024 18:13

வாக்குறுதிகள் கிடக்கட்டும் கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் எங்காவது தீவிரவாதிகள் குண்டு வைத்து, துப்பாக்கி சூடு நடத்தி பத்து- நூறு என்ற கணக்கில் மக்கள் இறந்தார்களா ? பாகிஸ்தானும் சீனாவும் வாலாட்டினார்களா ? கொரோனாவில் இத்தாலி, சீனா, அமெரிக்காவில் லட்சகணக்கில் மனிதர்கள் மடிந்தது போல பாரதத்தில் நிகழ்ந்ததா ? மன்மோகன்சிங் ஆட்சி போல மஹாராஷ்டிராவில் அடிக்கடி விவசாயிகள் யாராவது தற்கொலை செய்து கொண்டார்களா ? அடிக்கடி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனரா ?


A1Suresh
ஏப் 24, 2024 17:06

அரசின் செயல்திட்டங்களை எதிர்கட்சிகள் எப்படி பாராட்டும் ? வயிறு எரிந்து குறை சொல்லவோ அல்லது ஒன்றுமே நடக்கவில்லை என்று கோயபல்ஸ் பொய் பிரசாரம் மட்டுமே செய்ய இயலும்


A1Suresh
ஏப் 24, 2024 17:05

தினமும் அரசு செய்திகளையும் படித்தல் வேண்டும் பாரத நாட்டை உலக தலைவர்களி பாராட்டுவதை அறியவேண்டும் மன் கீ பாத் நிகழ்ச்சியிலும், நாடாளுமன்ற விவாதங்களிலும், ஆர்எப்ஐ மனு தக்கல் செய்தோ , அமைச்சர்களைக் கேட்டறிந்தோ செயல்பட்டால் ஆட்சியின் நலத்திட்டங்கள் புரியும் அவ்வலவு ஏன் ? பிரயாணம் செய்யும் பொழுது கண்ணை திறந்து பார்த்தாலே பாஜக அரசின் உள்கட்ட வளர்ச்சி பணிகள் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியுமே


Rengaraj
ஏப் 24, 2024 16:45

திராவிட முன்னேற்ற கழகத்துக்கு இந்தி தெரியாது...உங்களுக்கும் தெரியாதா? பதினைந்து லட்சம் பாராளுமன்றத்தில் போட்டு காண்பியுங்க


அசோகன்
ஏப் 24, 2024 15:50

திமுக ஒரு கட்சி அது எதை எழுதி கொடுத்தாலும் அப்படியே சொன்னால் என்னவாகும்!


Senthil K
ஏப் 24, 2024 15:37

15 லட்சம் என்ற திராவிட கதையை சொல்லும் போதே.. தெரிந்து விட்டது.. இந்த.. சோனியா அடிமையின் யோக்யதை... பிஜேபியின் தேர்தல் வாக்குறுதியில் இந்த 15 லட்சம் என்பது எத்தனையாவது வாக்குறுதி என்று கூற முடியுமா??


கண்ணன்
ஏப் 24, 2024 15:19

இரண்டுமுமறைகளும் பி ஜே பி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரிசையக வெளியிட்டுள்ளார்களே!


vijayaraj
ஏப் 24, 2024 14:53

யாராவது புதிய விவசாய சட்டங்களை மதித்து அதை எதிர் கட்சிகள் நிறை வேற விட்டனரா ? இப்போது இரட்டிப்பு வருமானம் எங்கே என்று கேட்டல் என்ன செய்வது


ஆரூர் ரங்
ஏப் 24, 2024 14:49

இப்போது பிஜெபி க்கு மாறியவர்களை ஊழல்வாதிகள் எனக் குறிப்பிடும் நீங்கள் அவர்கள் உங்கள் கட்சியில் இருந்த போது அதே போல நினைத்தீர்களா? அவர்களை ஊழல்வாதிகள் என்றே கருதி வெளியேற்றவில்லையே. ஆக உங்களுடன் இருந்தவரை மட்டுமே அவர்கள் புனிதர்கள்?


பாமரன்
ஏப் 24, 2024 14:44

ஊமையா அழுவறது இதுதான் போல ??


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி