உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார் சஞ்சீவ் கன்னா; இவர் யார் தெரியுமா?

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார் சஞ்சீவ் கன்னா; இவர் யார் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரைத்தார். இவர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு, நாட்டின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் சந்திரசூட் பதவியேற்றார். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 10ம் தேதி நிறைவு பெறுகிறது. அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=awr3xa03&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இவர் வரும் நவம்பர் 10ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு பதவியேற்பார். வரும் 2025ம் ஆண்டு மே மாதம் வரை பதவியில் இருப்பார்.

சஞ்சீவ் கன்னா யார்?

* 1960ம் ஆண்டு மே 14ம் தேதி டில்லியில் இவர் பிறந்தார். டில்லி பல்கலையில் சட்டம் பயின்றார்.* இவரது தந்தை டில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 1985ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவரது தாயார் சரோஜ் கன்னா டில்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஹிந்தி பேராசிரியராக பணியாற்றினார்.* இவர் 1983ம் ஆண்டு டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கன்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.* கடந்த 2004ம் ஆண்டு டில்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.* டில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். * ஜனவரி 18, 2019 அன்று, எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. * இவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் ஆலோசகராகவும் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kulandai kannan
அக் 17, 2024 19:25

நவம்பர் 10 நாட்டிற்கு நல்ல நாள்.


God yes Godyes
அக் 17, 2024 13:51

நீதிபதிகளாக உயர் பதவியில் இருப்பவர்கள் சட்ட புத்தகத்தில் மூழ்கி இருக்காமல் அரசியல் வாதிகள் எப்படி ஆட்சி செய்து மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்கிறார்கள் என்பதை கால முறை கண்காணிப்பில் வைத்து பிரதமரிடம் சொல்லவேண்டும்.


Kanns
அக் 17, 2024 12:47

Waste of Peoples Money. What he did for Supreme Peoples Welfare unbiased-fast-cheap Justice & Protection from Extensive Misuses of Powers by Ruling PartyMenGovt, their Stooge Officials esp Police, Judges, Investigators& Vested False Complainant Gangsters women, union /groups, SCs,advocates etc.


Mohamed Younus
அக் 17, 2024 12:42

எந்த உருட்டல் , மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாமல் செயல்பட வேண்டும்.


ஆரூர் ரங்
அக் 17, 2024 11:57

தந்தையும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார் நோட் த பாயிண்ட். . முக்கிய தகுதி. அரசியலில் மட்டும் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளித்தால் போதுமா?


Sampath
அக் 17, 2024 12:12

வாரிசுகளில் தகுதி உள்ளவர்கள் வருவதில் தவறில்லை தற்குறிகள் தான் வரக்கூடாது


Barakat Ali
அக் 17, 2024 13:48

வாரிசுகளில் தகுதி உள்ளவர்கள் வருவதில் தவறில்லை... வாரிசுகளுக்கு ஏற்ற வகையில் தகுதிகள் வளைக்கப்பட்டால் பிறகு ஜனநாயகத்தின் பொருள் என்ன ????


Balakumar V
அக் 17, 2024 11:40

வாழ்க கொலிஜியம் சிஸ்டம்


சமீபத்திய செய்தி