உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணத்துக்கு யார் பொறுப்பு; ஏன் இன்னும் ராஜினாமா பண்ணலை: ராகுல் சரமாரி கேள்வி

பணத்துக்கு யார் பொறுப்பு; ஏன் இன்னும் ராஜினாமா பண்ணலை: ராகுல் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், 'செபி'யின் தலைவர் மதாபி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருந்ததாக 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த நிலையில், 'இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் உடையவை' என, செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fqwolm58&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பங்குச்சந்தை

இந்நிலையில், சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். போட்டி நடுவர் முடிவெடுக்கும் போது தவறு செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது. அப்படியென்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? இது தான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை.

ராஜினாமா செய்யாதது ஏன்?

செபி தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா? செபி தலைவரா? அல்லது இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்குமா? பார்லி கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது. சில்லறை முதலீட்டாளர்களின் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்ட செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கேள்விக்கு ஆளாகியுள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 113 )

என்றும் இந்தியன்
செப் 10, 2024 17:41

அப்போ ராகுல் நீ பல தடவை ராஜினாமா செய்யணுமே உன் சகல வித தினசரி உலரும் வார்த்தைகளால் செய்யும் செயல்களால்???ஏன் இது வரை ராஜினாமா செய்யவில்லை


M Ramachandran
ஆக 26, 2024 19:53

ஐயா ராகுல் அவர்களென உங்களை ... பொறுப்புள்ள... எதிர் கட்சி தலைவர் ஸ்தானத்தில் உட்கார வைத்துள்ளார்கள். முக்கிய பிரச்சணைய்யாகா கல்கத்தா டாக்டர் பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்ய பட்டுள்ளார். இந்த பிரச்னை கேரள, தமிழ்நாடு உட்பட பல மாநிலஙகளில் நடைய்ய பெற்று கொண்டிருக்கிறது பெண் மருத்துவர்களுக்கு பாது காப்பிபில்லை. அதை பற்றி வாய் மூடி இருக்கிறீர்கள். யாரவது உஙகளையய கேட்டால் நீஙகள் வேறு ப்ரச்சனனையாய் பேசி திசைய்ய திருப்ப பார்க்கிறீர்கள் உஙகள் பொறுப்புணர்ந்து நடப்பதை தான் மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.


kumarkv
ஆக 24, 2024 16:01

காங்கிரஸ் ஆட்சியில் யார் பொறுப்பபாய்இருந்தாங்க


RAVINDHIRAN PA
ஆக 18, 2024 18:19

ராகுல் becomes CIA ஏஜென்ட் .. வேறென்ன சொல்ல


M Ramachandran
ஆக 31, 2024 23:03

Perfectly agree with you. No doubt in it


SRINIVASAN THIRUMALAI
ஆக 18, 2024 17:46

நீங்களே பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றல் ஏன் இன்னும் எங்கள் ஹிந்துஸ்தான்ல இருந்துகிட்டு வெளி நாட்டு அதிகாரிகளுக்கு அடிமை தொழில் seigireergal


SABA PATHY (LIC SABA)
ஆக 18, 2024 17:41

அதி புத்திசாலி நினைப்பு


SABA PATHY (LIC SABA)
ஆக 18, 2024 17:39

பையன் ராகுல்


Mohan
ஆக 17, 2024 15:38

ஐயா மகா புத்திசாலி அவர்களே பங்குச்சந்தை முதலீடுகள்,சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என ஏன் எல்லோரும் கரடியாக கத்துகிறார்கள்???. பங்குசந்தையில் விலையை சதி செய்து இறக்கி "" ஷார்ட் செல்லிங்"" செய்து காசு பார்க்கும் கூட்டம் தான் """ஹிண்டன்பர்க் ரிசர்ச்""".இவிங்க முதுகில சாணி, இவுங்க வந்து இன்னொருத்தர் உடம்புல சேறுன்னு சொன்னா, நீங்க வேனா நம்புங்க, நாங்க நம்ப இயலாது. அவுனுங்க லாபம் சம்பாதிக்கறத்துக்காக புனை சுருட்டாக சொன்னதை வைத்து""" பணம் இழப்பு"" ன்னு சொல்றது, நியாயம் கேட்பது.... ஐயா, ஆண்டவனுக்கே அடுக்காது


R.MURALIKRISHNAN
ஆக 17, 2024 14:26

உம்மால் இந்தியாவிற்கு வேண்டாம் காங்கிரசுக்கு என்னலே பயன்?


karthikeyan.P
ஆக 17, 2024 14:15

மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை