உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது உங்கள் இடம்: காங்கிரஸ் காணாமல் போய் விடுமோ?

இது உங்கள் இடம்: காங்கிரஸ் காணாமல் போய் விடுமோ?

என்.ஏ. நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஆங்கிலேயர்களிடம் இந்தியாவும், மக்களும் அடிமையாக இருந்த போது, மக்களை ஓரணியில் திரட்டி, விடுதலை வேண்டி போராட உருவான அமைப்பு தான், காங்கிரஸ்.இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 'இந்த அமைப்பை கலைத்து விடலாம்' என, மகாத்மா காந்தி கூறிய போது, நேரு அதை ஏற்க மறுத்தார்; விளைவு, காங்கிரஸ் ஆளுங்கட்சியாக மாறியது. நேரு மறைவுக்கு பின், யார் அடுத்த பிரதமர் என்ற போட்டி வந்த போது, தலைவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொருவர் பெயரை பரிந்துரைக்க, அன்று பெருந்தலைவர் காமராஜர் கை காட்டியது, இந்திராவை தான்.அதன்பின் காங்., கட்சி ராஜிவ், சோனியா, ராகுல் என, நேருவின் பரம்பரை சொத்தாகி போனது. ராஜிவுக்கு பின், சோனியாவை பிரதமராக்க கட்சியினர் முயற்சித்த போது, எதிர்க்கட்சிகளும், மக்களும், 'சோனியா வெளிநாட்டு பிரஜை' என, கடுமையாக எதிர்ப்பு கிளப்ப, மன்மோகன் சிங்கை பிரதமராக்கி, மறைமுகமாக சோனியா குடும்பமே நாட்டை ஆண்டது.ஆளுங்கட்சியான காங்., பலவீனமான போது, ஆட்சியை பலப்படுத்த கூட்டணி அமைத்தது; அதுவே பலவீனமாகி, ஆட்சியில் பங்கு, கூட்டாட்சி என தரம் தாழ்ந்தது. பின், மாநில கட்சிகளிடம் மண்டியிட்டது என, இன்று வரை சுயமாக எழுந்து நிற்க, காங்கிரஸ் பெரியளவில் முயற்சிக்கவில்லை.வரும் லோக்சபா தேர்தலில், பல மாநில கட்சிகளின் பலத்தோடு, பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் தோற்கடிக்க, 'இண்டியா' கூட்டணி அமைத்து, களம் காணும் முன், காங்கிரசின் கனவு கலைந்து போனது. காங்கிரஸ், தேசிய அளவில் மக்களிடம் மரியாதை இல்லாமலும், மாநில கட்சிகளிடம் அவமரியாதையோடு, சுயமரியாதை இழந்து நிற்பது பரிதாபமே.இந்த நிலை நீடித்தால், 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்ற பா.ஜ.,வின் கோஷம் நிறைவேறி விடும். கட்சி உருப்பட, மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தை ஆளும் கூட்டணி கட்சி செய்யும் ஊழல்களை எதிர்க்க வேண்டும். மவுனமாக இருந்தால், காங்கிரஸ் காணாமல் போவதை தடுக்க முடியாது.நாட்டை ஆள ஆசைப்படும் ராகுலும், அரசியல் முதிர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும். எதை பேசினாலும், அதில் அர்த்தமும், ஆழமும் இருக்க வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். பொது நலன் கருதி உழைத்தால், போனால் போகுது என, எதிர்காலங்களில் காங்கிரசுக்கு மக்கள் வாய்ப்பு தரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ஆரூர் ரங்
பிப் 16, 2024 15:35

ராகுல் இங்கிலாந்தில் ஒரு நிறுவன இயக்குனராக ஆனபோது விண்ணப்பத்தில், தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்று தெரிவித்திருந்தார்.


ஆரூர் ரங்
பிப் 16, 2024 15:33

இட்டாலி சட்டபடி ஒருமுறை இட்டாலி பாஸ்போர்ட் வாங்கியவர் வாழ்நாள் முழுவதும் அதனை கேன்சல் செய்ய முடியாது. இத்தாலியன் குடிமகனாகவே கருதப்படுவார்.????பாரத சட்டப்படி வேறு நாட்டு கடவுச்சீட்டு வைத்திருந்தால் பாரத கடவுச்சீட்டு பெறுவது இயலாது. இப்போ சொல்லுங்க. சோனியா ராகுல் இங்கு பிரதமராக முடியுமா?


Kuppan
பிப் 16, 2024 15:04

1) காங்கிரஸ் தலைவரும் ஒரு டம்மி பீஸ் பொம்மை, 2) ராகுலும் இன்னும் வயசுக்கு வரவில்லை 3) வேறு ஒரு தகுதியான தலைவற்கு ஒப்படைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை 4) மேலும் துடிப்பான இளைஞர்களோ இல்லை 5) இருப்பது எல்லாம் பழம் தின்னி கொட்டை போட்ட கிழடுகள், இப்படியே எவ்வளவு காலம் தான் நொண்டி கொண்டிருப்பது, அது மரணித்து கொண்டிருக்கிறது, இந்த பொது தேர்தலோடு அதற்கு பால் ஊத்திவிடுவார்கள்.


g.s,rajan
பிப் 16, 2024 13:41

காங்கிரஸ் கட்சியை இனி கலைக்க வேண்டாம் .அது தானாகவே கலைந்துவிடும்.....


sahayadhas
பிப் 16, 2024 13:15

காங்கிரஸ் திருடர்கள் அனைவரும் BJP ல் உள்ளதால் காணாமல் போகாது


Sathyam
பிப் 16, 2024 12:34

Why you should never vote khangress Pakistan attacked 26/11, but the khangress took it in color of the plot of the RSS. The Supreme Court called Lord Ram fantasy. In the Supreme Court, 22 lawyers stood the army against Ram Temple. Due to the khangress, Lord Ram had to stay in tent cracked for many years. Ram Setu was scared to destroy. Community Violence brought the bill to Hindus as riot. Jihadi by recognizing the Wakif Board and Muslim Personal Law protected thinking. The Muslim troubleshooting commission formed the minority commission. to save the terrorist Supreme Court ed at 12 pm. Sonia Gandhi sheds tears on the death of terrorist. Section 370 and Article in Jammu Kashmir He took 35A and kept Jammu Kashmir as the puppet of Pakistan for 70 years. Rohingya illegal to Bangladeshi infiltrators Let's enter India. khangress lawyer Rohingya lobbied in the Supreme Court against extracting Bangladeshi i nfiltrators from India are doing. The khangress itself had launched the bullets in 1966 on the unarmed innocent saints demanding a ban on Gau murder. khangress The leaders cut the cows in Kerala. Always opposes Hindutva. khangress accepted the partition of India. The khangress easily let Pakistan take half Kashmir. The khangress only let China capture half Ladakh. As a result of khangress' s Kuniti, many tribes in North East moved to the uprising route and the North East Rebellion for several years He was burning in the fire and deprived of development for 60 years. Manipur violence is also the side effects of khangress' s viruses. khangress He scams many big in his 60 years of governance. In 1984, the Sikh massacre is the responsible khangress. khangress has terrorists Left and contested the election by giving t ickets from your party. khangress gave protection to urban Maoists. khangress is India worked to contaminate glorious history. Many terror attacks took place in the khangress' s worst Governance and innocent citizens had their own life. khangress had questioned surgical strike. Mastermind Yassin Malik of Kashmiri Hindus at PMO Going to meet Prime Minister Manmohan Singh. Today khangress owner Rahul Gandhi Foreign forces, George Soros and China's cutputs remained. khangress leaders love Pakistan and China but they hate India very much which is still seen today. khangress Only had imposed an und emergency in the country to save its power. The list of khangress' s 60-year-old Kush Governance is very long. khangress This country has given numerous wounds to this country in 60 years. khangress_ worst Governance


duruvasar
பிப் 16, 2024 12:25

2019 இல் ராகுல் தான் பிரதமர் என கூறிய ஒரே தலைவரான ஸ்டாலின் இந்த முறை துபாயில் யாரோ ஆர்வகோளாரு உசுப்பேத்தி யதில் இந்த முறை நானே பிரதமர் என்ற அளவுக்கு போய்விட்டார்.கையிலிருந்த ஒரு ஸுகொன்ஸ் சீட்டும் போய்விட்டதால் ராகுல் இப்போது ஒரு ஜோக்கர் சீட்டுடன் ஃபுல்லுக்கு ஆடுகிறார்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 16, 2024 10:54

மாநில கட்சிகளிடம் மண்டியிட்டது என்ற சொற்கள் மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பிஸ்கட் துண்டுக்கு வாலாட்டும் வேலைதான் காங்கிரஸ் செய்துகொண்டிருக்கிறது. கட்சி அலுவலகத்தை அறிவாலயத்துக்கு மாற்றி இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டன.


HoneyBee
பிப் 16, 2024 09:14

உயிர் கொடுக்க முடியாததை போல் காங்கிரஸ் கதை உள்ளது. முடிந்தது அவர்கள் கதை


Barakat Ali
பிப் 16, 2024 08:43

போட்டோவை பாருங்க ..... பப்புவுக்கு குட்டு வைக்கப்போற மாதிரி கையை அன்னை உயர தூக்கறாரே ????


பேசும் தமிழன்
பிப் 16, 2024 09:04

இப்படி ஒரு மக்கு பையனை பெற்றதுக்கு....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை