உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி: நளின்குமார் கட்டீல்

3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி: நளின்குமார் கட்டீல்

''லோக்சபா தேர்தலில், 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,'' என்று, தட்சிண கன்னடா தொகுதி பா.ஜ., - எம்.பி., நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.லோக்சபா தேர்தலை ஒட்டி, மங்களூரு டவுன் பன்ட்ஸ் ஹாஸ்டல் பகுதியில் பா.ஜ., தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. தட்சிண கன்னடா தொகுதி எம்.பி., நளின்குமார் கட்டீல், மாவட்ட பா.ஜ., தலைவர்கள் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் நளின்குமார் கட்டீல் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார். பன்ட்ஸ் ஹாஸ்டல் பகுதியில் கடந்த 2004 முதல் தேர்தல் அலுவலகம் திறந்து வருகிறோம். இந்த அலுவலகம் பா.ஜ.,வின், வெற்றி சின்னமாக உள்ளது. இந்த அலுவலகத்தை பயன்படுத்தி, நாங்கள் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று உள்ளோம்.கடந்த சட்டபை தேர்தலில், பா.ஜ., தோற்று இருக்கலாம். ஆனால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் புத்துாரை தவிர, அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வென்றது. கடந்த லோக்சபா தேர்தலில் 2 லட்சத்து 73 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றேன். இம்முறை 3 லட்சத்திற்கும், அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை