உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் சம்பவத்தை முன்வைத்து மாநில அந்தஸ்து கோர மாட்டேன்; உமர் அப்துல்லா திட்டவட்டம்

பஹல்காம் சம்பவத்தை முன்வைத்து மாநில அந்தஸ்து கோர மாட்டேன்; உமர் அப்துல்லா திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்; பஹல்காம் சம்பவத்தை முன் வைத்து, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரமாட்டேன் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா திட்டவட்டமாக கூறி உள்ளார்.பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு மேலும் வேகப்படுத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x70c7uug&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில் ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் உமர் அப்துல்லா பேசினார். அப்போது அவர் கூறியதாவது; 26 பேரின் உயிரிழப்பால் நாடு இன்னும் துக்கத்தில் இருக்கும் இப்படிப்பட்ட தருணத்தில் இப்பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரப் போவது இல்லை. பஹல்காமிற்கு பிறகு மாநில அந்தஸ்து எப்படி நான் கேட்க முடியும்? கடந்த காலங்களில் மாநில அந்தஸ்து பற்றி பேசியுள்ளோம். எதிர்காலத்திலும் பேசுவோம். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்றே தெரியவில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் பார்த்து இருக்கிறோம். பைசரனில் 21 ஆண்டுகள் கழித்து இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதல் நடந்தது கிடையாது. ஒரு விருந்தினராக, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வது எனது கடமை. ஆனால் என்னால் அதை செய்யமுடியவில்லை. தந்தையை இழந்த குழந்தைகள், திருமணமான சில நாட்களிலே கணவனை இழந்த அந்த மனைவி ஆகியோருக்கு நான் என்ன பதிலை சொல்ல முடியும்? அவர்கள் எங்களின் தவறு என்ன என்று கேட்கிறார்கள்.நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
ஏப் 29, 2025 00:09

ரெண்டு கோடி இந்தியரை காஷ்மீருக்குள் நிரந்தரமாக குடிவைப்பதே, இதற்கு ஒரே தீர்வு.


shreya
ஏப் 28, 2025 23:46

இதுக்கு காரணமே நீ தாண்டா. உன் ஆட்சியில தான் இந்த கேவலம் எல்லாம் நடக்குது. இது ஒண்ணும் பார்டர் ல நடக்கல பழியை தூக்கி பிஜேபி மேல போடறதுக்கு.


Saleemabdulsathar
ஏப் 28, 2025 20:17

பதவி முக்கியம்


மீனவ நண்பன்
ஏப் 28, 2025 20:05

குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தபோது குஜராத் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ..இறந்த ஆண்களின் சடலங்கள் மரப்பெட்டியில் அவர்களின் மனைவிகள் விமான இருக்கைகளில் புறப்பட தயாரா இருந்தபோது குலாம் நபி இதே வசனத்தை பேசி கண்ணீர் விட்டார் .ஸ்ரீநகரில் பிரபலமான வைஷ்ணவ தாபா உணவகத்தின் முதலாளியையும் ..லால் சவுக் மருந்துக்கடை உரிமையாளரை கடையிலேயே சுட்டுக்கொன்றார்கள் ...


TRE
ஏப் 28, 2025 18:27

மோடியை நம்பாமல் மாநில அந்தஸ்து கோரலாம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 28, 2025 19:01

அவ்வளவு பயம் மோடி மேல். தொடரட்டும்


தத்வமசி
ஏப் 28, 2025 18:24

மாநில அந்தஸ்து இருந்தவரை என்ன சாதனை செய்தீர்கள் ? கடந்த பல பத்தாண்டுகளாக அங்கே தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இவ்வளவு காலங்களாக நடந்த கொலைகளுக்கு உங்களின் தந்தையும் பாட்டனார் ஷேக் அப்துல்லாவும் தான் தான் காரணம். கூடவே நேரு மாமாவும் சேர்ந்து கொண்டு காஷ்மீரை தீவிரவாதத்தின் கோரப்பிடியில் வைத்திருந்தீர்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சில ஆண்டுகள் வரை காஷ்மீரத்தை ரத்தக்களறியாக்கிய தீவிரவாதத்தை மோடி ஏன் தீர்க்கவில்லை என்று கேட்பது அநியாயம்.


Senthil
ஏப் 28, 2025 19:47

என்ன குறைந்திருக்கிறது? இதுவரை இராணுவ அளவில் இருந்த தாக்குதல்கள் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி பொதுமக்கள்மீது திரும்பி இருக்கிறது, இதுதான் கொஞ்சம் குறைந்திருக்கிறதா?


visu
ஏப் 28, 2025 18:10

உமர் அவங்க அப்பா மாதிரி இல்லை அப்பப்ப நிதர்சனத்தை பேசிவிடுவார்


Sudha
ஏப் 28, 2025 17:49

போதும் நீலி கண்ணீர், சாகும்வரை நீதான் முதல் மந்திரி எல்லா தீவிரவாதியையும் பிடிச்சு கொடுத்தா, ஓகே வா?


sankaranarayanan
ஏப் 28, 2025 17:24

உண்மையை புரிந்துகொண்ட உத்தமர் உமர் வாழ்க மாநிலமாக உடனே ஆனால் அது காணாமலே போயிடும் ஜாக்கிரதை முதலில் தீவிரவாதிகளை அடியோடு அழித்து விட்டிட்டு பிறகுதான் அதைப்பற்றி பேசவே வேண்டும் மோடிக்கு முழு ஆதரவு கொடுங்கள் போதும்


Kumar Kumzi
ஏப் 28, 2025 17:16

குருமா சைமாண்டிக்கும் கொஞ்சம் சொல்லங்கோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை