உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முட்டையில் ஊறிய புழுக்கள்... பிளிங்கிட் நிறுவன கிடங்கில் அதிகாரிகள் ரெய்டு

முட்டையில் ஊறிய புழுக்கள்... பிளிங்கிட் நிறுவன கிடங்கில் அதிகாரிகள் ரெய்டு

மங்களூரு: கர்நாடகாவில் முட்டைகளில் புழுக்கள் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, பிளிங்கிட் (Blinkit) நிறுவன கிடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர். பிரபல ஆன்லைன் உணவுப்பொருள் விநியோகத் தளமான பிளிங்கிட் மூலம் மங்களூருவைச் சேர்ந்த ஒருவர், கோழி முட்டைகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த முட்டையை எடுத்து பார்த்த போது, அதில் புழுக்கள் ஊறிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது தொடர்பாக கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சருக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில், கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள பல்நிர் ஸ்கொயரில் இயங்கும் பிளிங்கிட் நிறுவன கிடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, சேதமடைந்த முட்டைகள் அடங்கிய பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவற்றை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள ஜெப்டோ கிடங்கில் உணவுப் பாதுகாப்புத்துறை சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தூக்கி எறியப்பட்ட கவர்கள் மற்றும் பாட்டில்கள் கண்டறியப்பட்டதோடு, முறையற்ற லேபிளிங் மற்றும் சுகாதாரமற்ற உணவு கையாளுதல் போன்ற விதிமீறல்களால், அந்த கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது.ஏற்கனவே, துக்காராம் முண்டே கலக்கி வரும் மஹாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள பிளிங்கிட் நிறுவனத்தில் சுகாதார மற்றும் சேமிப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மாநில உணவு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
செப் 04, 2026 12:08

சாதாரணமா முட்டையிலிருந்து கோழிக்குஞ்சுதான் வெளிவரும். ஆனால் இங்கே புழுக்கள் வந்திருக்கின்றன. மக்கள் எந்தவித சோம்பேறித்தனமும் படாமல் நேரடியாக கடைகளுக்கு சென்று அவர்களுக்கு வேண்டியதை சரிபார்த்து வாங்கவேண்டும். ஆன்லைன் மூலம் பொருட்கள், குறிப்பாக உணவுப்பொருட்கள் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.


baala
செப் 04, 2026 11:14

எதற்கு online. நம்மூர் மளிகை கடையில் வாங்கினால் நல்ல பொருட்கள் கிடைக்குமே. அதை நாம் சொல்ல முடியாது.


Chandhra Mouleeswaran MK
செப் 04, 2026 13:01

என்னாங்க நீங்க காலத்துக்குத் தகுந்தாப்பில மாரமாட்டேங்கரீங்க "டயல் எ மீல்" எப்பேர்க்கொத்த ஒரு திட்டம்னு நீங்க இன்னும் தெரிஞ்சுக்கல்லீன்னாக்கா நீங்க 1947 க்கு முந்தையவர்னு தெரீது ""மளிகைக் கடைல வங்கலாம்"" ன்னுட்டீங்க வீட்டில இருந்து குடும்பத் தலைவிக முதல்லெ மளிகைப் பொருள் பட்டியல் தயாரிக்கணும். சாதாரண வேலையா அது? வீட்டில இருக்கர யாராருக்கு எப்பிடி எப்பிடிப் பட்ட பொருள் வேணும்னு கண்டு புடிக்கணும். அப்பத்தான் பட்டியல்வே வரும் அத எடுத்துட்டுக் கடைக்குப் போகணும். அதுக்கு வண்டி வாகனம் வேணும் அத ஓட்டரதுக்கு ஆளு வேணும். இல்லாக்காட்டி வாடகை வண்டி புடிக்கணும். கடைல போயிக் காத்திருக்கணும். ஒவ்வொரு பொருளா வாங்கி வாங்கித் தரம் அளவு வெலை தயாரிப்புத் தேதி காலாவதித் தேதி, பாக்கணும். அதுகள ஒளுங்கா பாக்கேஜ் செய்யணும். பிளாஸ்டிக் பை கூடாதுங்கராங்க அப்ப, நெரைய அட்டைப்பெட்டியும் துணிப் பையும் கொண்டு போகணும். எண்ணை வகைகளுக்குப் பாத்திரம் கொண்டு போகணும். இதுக்குள்ள தாவு தீந்துரும் வீட்டுக்கு வந்து அதுகள எரக்கி வச்சு அததுக்கான பாத்திரம் பெட்டியில பிரிச்சு அடுக்கி வைக்கணும். அதுக்கு வதவதன்னு பாத்திரம் பண்டம் எல்லாம் வேணும். பூச்சி பொட்டு புளு வராமப் பாதுகாப்பா வைக்கணும். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இருங்க ஒரு தூக்கம் போட்டுட்டு வாரன் அப்பரம் அன்னிக்கி என்னென்ன சமைக்கணும்னு முடிவு செஞ்சு அதுக்கான மத்த பொருட்களச் சேகரிக்கணும். கொளம்பு சாம்பார், ரசம் பொரியல் இனிப்பு காரம் வத்தல் வடகம் வடை பாயசம் எல்லாத்துக்கும் மசால் சாமான் காய்கறி கீரை எல்லாத்துக்கும் மரிவிடி ஒரு நடை காய்கறிக் கடைக்குப் போயி வரணும். அதுகள அல்லாத்தையும் சுத்தப் படுத்தணும். அததுக்குத் தகுந்த மாதிரி சலிக்கணும் நருக்கணும் துருவணும் வேக வைக்கணும் வதக்கணும் வருக்கணும் அரைக்கணும். ஹைய்ய்ய்ய்ய்ய்யோ என்னாங்க நீங்க அப்பரமேட்டிக்கிச் சமைக்கணும். காஸ் அடுப்பு, கரண்டு அடுப்பு, கரண்டு இல்லாட்டி கெரசின் அடுப்பு எல்லாம் தயாரா இருக்கணும். வத வதன்னு கண்ட மேனிக்கிப் பாத்திரம் பண்டம் கரண்டி கிரண்டி சுரண்டி தட்டு தாம்பாளம் குண்டா அண்டா கத்தி கப்படா ஆட்டுக்கல் அம்மிக்கல் கிரைண்டர், மிக்ஸி எல்ல்ல் - - ல்லம் வேணும் அதுக நல்ல நிலைமைல இருக்கணும். முக்கியமா கரண்டு இருக்கணும் இருங்க போவாதீங்க இன்னம் எவ்ளா இருக்கு அப்பரம் சமைக்க ஆரம்பிக்கணும். அதுல எத்தனை டெக்னிக்கு எத்தனை வேலை அதக்கெல்லாம் எம்முட்டு நேரம் புடிக்கும் யப்ப்ப்ப்ப்ப்ப்பா சமைக்கரதச் சொன்னா நீங்க ஓடீருவீங்க சமைச்ச பின்னாடி வீட்டிலிருக்கரவங்க சாப்பிட வர வரைக்கும் அதுகளச் சூடு ஆராமப்பாத்துக்கணும். அவய்ங்க வந்த பின்னாடி கிட்ட இருந்து ஆளாளுக்கு ஏத்தா மாதிரி பரிமாரணும் சமைச்சது புடிக்கலைன்னா உர்ர்ராண்னுவாங்க மூஞ்சியைத் தூக்கினுவாங்க சாப்பாடுகளில எதாச்சும் தலமுடி குப்பை பூச்சி கீச்சி இருந்துனுட்டா அப்பரம் அம்புட்டுத்தேன் சாப்புட்டான பொரகு எல்லாத்தையும் சுத்தம் செய்யணும் களூவணும்.மானாவாரிக்கித் தண்ணி வேணும். கிளீனிங் பவுடருக பெனாயிலு எல்லாம் வேணும். இது எல்லாம் முடியரதுக்கு மணி பத்துப் பதினொண்ணு ஆயிடும் மிசுங்க முடியாது இதில மித்த வேலகள ஆரு செய்யரது? செத்தெ ஒக்காரவோ படுக்கவோ எதுனாச்சும் ஒரு துளி நேறம் இருக்கா? நீங்களே பாத்தீங்கதான? குடும்பத் தலிவிங்க என்னாவரது? அவிய்ங்களுக்கு பல்லுத் தேய்க்கவோ குளிக்கவோ சாப்பிடவோ துக்கிணியூண்டு நேரம் எங்காச்சும் இருக்கா காட்டுங்க ஆனா - - ஆனா - - - ஆன்லைன் சாப்பாடுன்னாக்கா பாருங்க படுக்கைய விட்டு எந்திரிக்க வேண்டியது கூட இல்ல தூங்கி முளிக்கரம் ஒரு கண்ணால டீவீயப் பாத்துக்கிட்டு தடவர போன எடுக்கரம். மறு கண்ணால தடவர போனைப் பாத்துகிட்டுதில வர சாப்பாட்டு ஐட்டங்கள ஒண்ணொண்ணா டச்சு பண்டரம். கடோசில "அல்லோல்லோ ஜமேட்டோவா? இப்பா நானு அனுப்பர மீல்ஸ் ஆடர இன்னம் ஒன் அவர்ல அரேஞ்சு பண்ணி வீட்டில டெலிவரி தரீங்களா? ரொம்ப அர்ஜண்ட்டு அல்ல்ல்ல்லம் சுத்தமா இருக்கணும் என்னா?" அவ்ளவ்தானுங்க மரிவிடி தூங்கவோ டீவி பாக்கவோ போய்ரலாம் அடுத்த அவர்ல அத்தினி சாப்பாடும் டாண்ணு வந்துரும் படுத்துணுட்டே கூடச் சாப்புடலாம் ஒக்காண்ட்டே சாப்புடலாம். ஏன், டீவீ பாத்துணுட்டே சாப்புடலாம் ட்ரெடில்லெ ஜாக்கிங்க் பண்ணிட்டுக் கூடச் சாப்புடலாம் இல்ல இங்கில்லீச்சு அம்மிணிக பண்டர மாதிரி குளிச்சுணுட்டே சாப்பிடலாம், இல்ல, சாப்புட்டுட்டுக் குளிக்கலாம் வீடும் அதுனொட நாலு சொவுருங்களும் நமக்குக் கட்டிலு படுக்கைகளும் டீவியும் தடவர போனும் இருந்தாக்காப் போதும் இல்லியா? உப்பச் சொல்லுங்க எத்தினி நேரம் எத்தினி சாமான் எத்தினி பணம் எத்தினி வேலை மிச்சம் படுத்துணுட்டே - - டீவீ பாத்துணுட்டே - - - பொனத் தடவிணுட்டே - - - சாப்புட்டுக்கிட்டே - - - இருக்கலாம் சொர்க்க லோகம் சொர்ணலோகம் இந்திர லோகம் அதனாலதாங்க அன்னிக்கே நம்பி பாடி வச்சிருக்கார் """ இச்சுவை தவிர யான் போய், இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்காமா நகருளானே """


சமீபத்திய செய்தி