புதுடில்லி: அரவணைக்கவும், ஆதரிக்கவும் பெற்றோர் இல்லை, ஆனாலும் விடாமுயற்சியால் வென்று காட்டி இந்தியர்களின் இதயங்களில் இடம்பிடித்து உள்ளார் ஒலிம்பிக் நாயகன் அமன் ஷெராவத்.மல்யுத்தத்தில் சாதனை
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 57 கிலோ ஆடவர் ப்ரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார். தான் அறிமுகமான முதல் ஒலிம்பிக்கிலேயே பதக்கத்தை தட்டிச் சென்ற அவரின் சாதனை பயணம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. வெறும் 21 வயது 24 நாட்கள் என்ற குறைந்த வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அமன் படைத்துள்ளதே இதற்கு காரணம்.அர்ப்பணிப்பு
தாம் பெற்ற இந்த வெற்றியை, பதக்கத்தை தமது பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக கூறியிருக்கிறார் அமன். சாதனை படைத்த அவர் தமது 11 வயதில் பெற்றோரை இழந்தவர். யார் இந்த அமன் என்பதை பார்ப்போம்; சோகம் சூழ்ந்த 11 வயது
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் பீரோஹரில் 2003ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பிறந்தார். தமது 11 வயதிலேயே பெற்றோரை இழந்து அவரும் சகோதரியும் தவிக்க, உறவினர்கள் ஆதரவில் வளரத் தொடங்கினார். சோகத்தில் இருந்த அமனின் பார்வையை மல்யுத்தம் நோக்கி திருப்பினார் தாத்தா மங்கேராம் ஷெராவத்.அதிக கவனம்
ஒலிம்பிக் நாயகன் சுஷில்குமாரால் ஈர்க்கப்பட்ட அமன், தமது 11 வயதில் மல்யுத்தத்தில் அதிக கவனம் செலுத்தினார். ஆனாலும் ரவிகுமார் தஹியாவை கண்டு அவரை போலவே மாற ஆசைப்பட்டு தம்மை படிப்படியாக ஒரு வீரரான செதுக்கிக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார். வெற்றிகள்
2022ம் ஆண்டு அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறியது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 57 எடைப்பிரிவில் வெண்கலம், 2022ல் U23உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், 2023ல் ஆசிய மல்யுத்தத்தில் தங்கம் என வெற்றிகளுடன் வலம் வரத் தொடங்கி, பாரிஸ் ஒலிம்பிக்கிலும் மகுடம் சூடி இருக்கிறார். பாரம்பரியம்
பெற்றோர் இல்லை, ஆதரிக்க யாரும் இல்லை, ஆனால் ஜெயிக்க வேண்டும், போராட வேண்டும் என்ற குணம் ஒரு வீரனை வெற்றியை நோக்கி நகர வைத்திருக்கிறது என சொல்லலாம். மொத்தத்தில் மல்யுத்தம் எனது விளையாட்டு அல்ல, குடும்பத்தின் பாரம்பரியம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார் ஒலிம்பிக் சாம்பியன் அமன்.