உள்ளூர் செய்திகள்

ஓர் ஆண்டு ‘மரைன் இன்ஜினியர்’ படிப்பு!

மரைன் இன்ஜினியர் ஆக ஜொலிக்க விரும்பும் இளநிலை பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு, ஓர் ஆண்டு மரைன் இன்ஜினியரிங் படிப்பு (ஜி.எம்.இ.,) வரப்பிரசாதமாக அமைந்துள்ளது! இப்படிப்பு முடித்தவர்கள், மரைன் இன்ஜினியர் பதவியில் தனது பணியை துவக்கி, தொடர்ந்து தங்களது தகுதியை வளர்த்துக் கொள்வதன் மூலம், சி.இ.ஓ., (சீப் இன்ஜினியர் ஆபிசர்) எனும் உயரிய பணி நிலைக்கு முன்னேற முடியும். தகுதிஏ.ஐ.சி.டி.இ., அங்கீகரித்துள்ள ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது பி.டெக்., நேவல் ஆர்க்டெக்சர் படிப்பில் இப்படிப்பில் சேர தகுதி பெறுகிறார். மேலும், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2வில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு25 வயதிற்கு உட்பட்டவர்கள் ஓர் ஆண்டு மரைன் இன்ஜினியரிங் படிப்பில் சேர முடியும். பணி வாய்ப்புகள்* துறைமுகங்கள்* கப்பல் தளங்கள்* கப்பல் பழுதுபார்ப்பு தளங்கள்* கடல்சார் பயிற்சி நிறுவனங்கள்* கப்பல் நிறுவனங்கள்* நட்சத்திர ஹோட்டல்கள்* மருத்துவமனைகள் மற்றும் பல. ஊதியம்அதிக சம்பளம் கிடைக்கும் துறைகளில் மரைன் இன்ஜினியரிங் முக்கியமான ஒன்று. பயிற்சி நிலையில் உள்ள ஒரு பொறியாளர் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். இந்திய மெர்சன்ட் நேவியில் கவர்ச்சிகரமான சம்பளமும், சலுகைகளும் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் பட்சத்தில் ஊதியமும் மிக அதிகம். அனுபவம் மற்றும் கற்றுக்கொள்ளும் நுணுக்கங்களைப் பொறுத்து, சாதாரணமாக ஆறு இலக்கத்தில் ஊதியம் பெற முடியும். கல்வி நிறுவனம்பிரத்யேகமான இந்த ஓர் ஆண்டு மரைன் இன்ஜினியரிங் படிப்பு, மதுரையில் அமைந்துள்ள கடல்சார் அறிவியலுக்கான ஆர்.எல்., கல்வி நிறுவனம் குறிப்பிடத்தக்கது. இந்த படிப்பிற்கு ‘டைரக்ரேட் ஜெனரல் ஆப் ஷிப்பிங்’ அனுமதி அளித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு www.rlins.edu.in என்ற இணையதளத்திலோ அல்லது 98940 07317 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !