உள்ளூர் செய்திகள்

மூன்றுவிதமான துறைகளும் அவற்றுக்கான வாய்ப்புகளும்

இந்தியா என்பது பலவிதமான கலை மற்றும் கலாச்சாரங்களின் புதையலைக் கொண்ட நாடு. இந்நாட்டில், ஏராளமான பண்டைய ஓவியங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் கலைப் பொருட்கள், பண்டைய வரலாற்றின் பதிவாய் நிலைத்திருக்கின்றன. கலைப்பொருள் புனரமைப்பு வரலாற்று ஆதாரங்களுக்காகவும், நமது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையின் பெருமைகளை வருங்கால தலைமுறையினர் உணர்ந்துகொள்ளவும், அத்தகைய நினைவுச் சின்னங்கள் மற்றும் கலை ஆதாரங்களை பாதுகாத்து வைக்க வேண்டியுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியடைந்த நவீன உலகில், பழைய வரலாற்று நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில், தீவிர அக்கறை செலுத்தப்படுகிறது. ஒரு கலைப்பொருளை சுத்தம் செய்தல் மற்றும் அதன் சேதங்களை சரிசெய்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம், அப்பொருளை பழைய நிலைக்கு கொண்டுவரும் பணிதான் கலைப்பொருள் புனரமைப்பு(Art Restoration). கலைப்பொருள் புனரமைப்பு பணியின் மூலம், ஒரு கலைப்பொருளின் இயல்பான தன்மை பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், இப்பணியின் மூலமாக மட்டுமே, ஒரு கலைப்பொருளை, இன்னும் நீண்டகாலம் பாதுகாத்து வைக்க முடிகிறது. இந்தியாவில், கலைப்பொருள் புனரமைப்புத் துறையில் பயிற்சியும், திறமையும் கொண்டவர்கள், 3 தேசிய மியூசியம் மையங்கள் மற்றும் தனியார் கலைப்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றில், எதில் வேண்டுமானாலும் எளிதில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். இவைதவிர, ஒருவர் இதுதொடர்பான சொந்த தொழிலையும் தொடங்கலாம். இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில கல்வி நிறுவனங்கள் நேஷனல் மியூசியம் - புதுடில்லிமைசூர் பல்கலை - மைசூர்அலகாபாத் பல்கலை - அலகாபாத்குருக்ஷேத்ரா பல்கலை - குருக்ஷேத்ராINTACH கலைப்பொருள் பாதுகாப்பு மையம் - புதுடில்லி தனியார் துப்பறியும் நிபுணர் துப்பறியும் பணியின் மீது பலருக்கும் ஒரு தனி மோகம் உண்டு. ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் ஹெர்கூல் பாய்ராட் ஆகிய கதாப் பாத்திரங்கள், துப்பறிதல் குறித்து ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தின மற்றும் அதிகம் கற்பனை சார்ந்தும் இருந்தன. அதேசமயம், நடைமுறை உலகம் சார்ந்த துப்பறியும் பணி, சற்று மாறுபட்டதாக இருந்தது. ஒரு தனியார் துப்பறியும் நிபுணருக்கு, ஒரு தனிமனிதரை வேவு பார்ப்பதிலிருந்து, ஒரு பெரிய கார்பரேட் நிறுவனத்தை வேவு பார்ப்பது வரை, பணி நிலைகள் மாறுபடுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு தனியார் துப்பறியும் நிபுணராக ஒருவர் பணியாற்றுவதற்கு, லைசன்ஸ் பெற வேண்டியதில்லை. சட்டம் ஒழுங்கு குறித்த அறிவு, நடைமுறை அறிவு மற்றும் தேவையான கணினி அறிவு ஆகியவை, ஒரு துப்பறியும் நிபுணருக்கு தேவையான அம்சங்கள். எங்கே படிப்பது? த இந்தூர் கிறிஸ்டியன் காலேஜ் - இந்தூர்த நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பிரைவேட் இன்வெஸ்டிகேஷன் - புதுடில்லிஏ.சி.இ. டிடெக்டிவ்ஸ் இந்தியா இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் - புதுடில்லிலான்சர்ஸ் நெட்வொர்க் லிமிடெட் - புதுடில்லி டிஸ்க் ஜாக்கி டிஸ்க் ஜாக்கி எனும் வார்த்தை, முதன்முதலில், ரேடியோ அறிவிப்பாளர்களை குறிப்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது. கிராமபோன் ரெக்கார்டுகள் டிஸ்க்குகள் என்று அறியப்படுகின்றன. ஒரு நல்ல டிஸ்க் ஜாக்கி, ஒரு நிகழ்ச்சிக்கு உயிர் நாடியாய் இருப்பவர். டியூன்களை கலந்து பீட்ஸ் உருவாக்கி அதை சரியான கலவையாக கொண்டுவந்து, நிகழ்ச்சிகளை(party) சுவாரஸ்யமானதாக மாற்றும் பணியை டிஸ்க் ஜாக்கி செய்கிறார். தொடர்ந்த அனுபவத்தின் மூலமாகவே இத்தொழிலை சிறப்பாக கற்றுக்கொள்ள முடியும். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் இத்தொழிலுக்கு மவுசு கூடியுள்ளது. அதிகரித்துவரும் சமூக நிகழ்ச்சிகள் மற்றும் இதர பார்ட்டிகளால், டிஸ்க் ஜாக்கிகளின் காட்டில் தொடர் மழைதான். டிஸ்க் ஜாக்கிகள், பொதுவாக, கிளப்புகள், நடன அரங்குகள் மற்றும் விருந்து கூடங்கள் மற்றும் அடிக்கடி நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகள் ஆகியவற்றில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார்கள். நன்கு பிரபலமான பல டிஸ்க் ஜாக்கிகள், தங்களின் பிந்தைய ஆண்டுகளில், சொந்த ஸ்டுடியோக்களை ஆரம்பித்துக் கொள்கிறார்கள். மேலும், மியூசிக் புரடக்ஷன் போன்ற தொடர்புடைய துறைகளுக்கும் மாறிக் கொள்கிறார்கள். இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில கல்வி நிறுவனங்கள் Azaredo Acoustics, MumbaiJazzy's DJ Workshop, New DelhiSplinters DJ School, Mumbai


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !