சர்வதேச மாணவர்களின் புகழிடம் சிங்கப்பூர்!
ஆசிய நாடுகளில் குறிப்பாக, மேலாண்மை படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களின் பட்டியலில் பிரதான இடத்தை பிடிப்பது சிங்கப்பூர்! சர்வதேச அளவில் சிறந்த 50 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளது இதற்கு முக்கிய காரணம். டி.எச்.எல்., ஐ.பி.எம்., மற்றும் யூனிலிவர் போன்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள், இங்கு தங்களது மண்டல தலைமை அலுவலகத்தை நிறுவியுள்ளன. மேலும், சிங்கப்பூர் அரசாங்கம் பல மில்லியன் டாலர்களை கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்து, ஆசியாவின் முன்னணி கல்வி மையமாக மாற்றியுள்ளது. செலவு அதிகம்தான்... இங்கு பட்டப்படிப்பு படிக்கும் உள்நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடுகையில், சர்வதேச மாணவர்கள் 70 சதவீதம் அதிக கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. எனினும், அந்நாட்டு அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகையாக, ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகிறது. இதனால், ஏறத்தாழ 1,700 சர்வதேச மாணவர்கள் பயனடைகின்றனர். பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும், கல்வி மற்றும் வணிகத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ள சிங்கப்பூரில் படிக்க மாணவர்களிடம், பிறகு ஏன் போட்டி இருக்காது? சேர்க்கை விதிமுறைகள் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், ஜி.ஆர்.இ., ஜிமேட், சேட் மற்றும் ஆங்கில மொழிப் புலமையை பரிசோதிக்கும் டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற தகுதி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ‘அட்மிஷன்’ வழங்குகின்றன. சிங்கப்பூரில் படிக்க எவ்வளவு செலவாகும்? சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் படிப்பு நிலைகள்: இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பிரபலமான படிப்பு: பொறியியல், தொழில்நுட்பம், எம்.பி.ஏ.,கால அளவு: 17 மாதங்கள் (எம்.பி.ஏ.,)கல்விக் கட்டணம்: ரூபாய் 29.3 லட்சம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் படிப்பு நிலைகள்: இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பிரபலமான படிப்பு: தொழில்நுட்பம், எம்.பி.ஏ.,கால அளவு: 12 மாதங்கள் (எம்.பி.ஏ.,)கல்விக் கட்டணம்: ரூபாய் 26 லட்சம் சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் பல்கலைக்கழகம் படிப்பு நிலைகள்: இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பிரபலமான படிப்பு: எம்.பி.ஏ.,கால அளவு: 12 மாதங்கள்கல்விக் கட்டணம்: ரூபாய் 29.4 லட்சம் எஸ்.ஐ.எம் (சிம்) பல்கலைக்கழகம் படிப்பு நிலைகள்: இளநிலை, டிப்ளமோ, ஆராய்ச்சி பிரபலமான படிப்பு: எம்.பி.ஏ.,கால அளவு: 18 மாதங்கள் கல்விக் கட்டணம்: ரூபாய் 18.6 லட்சம் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம்படிப்பு நிலைகள்: இளநிலை, முதுநிலைபிரபலமான படிப்பு: ஆர்கிடெக்சர் அன்ட் சஸ்டனைபிள் டிசைன்கால அளவு: 3.5 ஆண்டுகள் கல்விக் கட்டணம்: ரூபாய் 11.2 லட்சம் இன்சீட்படிப்பு நிலைகள்: முதுநிலை மற்றும் ஆராய்ச்சிபிரபலமான படிப்பு: எம்.பி.ஏ.,கால அளவு: 10 மாதங்கள்கல்விக் கட்டணம்: ரூபாய் 46 லட்சம்