மீன்வளத்துறை அறிவியல்
நீரில் வாழும் உயிரினங்களில் முதுகெலும்புள்ள ஒரு உயிரினம் மீன். மீன்வளத்துறை அறிவியல் என்பது, பெருங்கடலியல்(ஓசனோகிராபி), சூழ்நிலையியல், உயிரியல், பொருளாதாரம் மற்றும் மேலாண்மை போன்றவை இணைந்து மீன்வளத்துறையின் செயல்பாடுகளை நிர்வகித்து அறிந்து கொள்ளுதலை படிக்கும் துறையாகும். மீன்வளத்துறையில் மீன் என்பது, மெல்லுடலிகள், தலைபிரட்டைகள் மற்றும் நீர் உயிரினங்களை குறிக்கும் பொதுவான வார்த்தையாகும். இந்தியாவில், 8,000 கி.மீ., அளவில் பரந்து விரிந்து கிடக்கும் கடற்கரை, 10 மாநிலங்களில் மீன்வளத்துறை அறிவியல் படிப்பை படிப்பதற்கு மையமாக விளங்குகிறது. மீன்பிடித்தொழிலில் இந்தியா உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. மீன்வளத்துறை தொடர்பான ஆக்கக்கூறுகளை இந்தத் துறைகளில் படிக்கலாம். மீன்களை உரிய முறையில் பாதுகாத்தல், பதப்படுத்துதல், மீன்கள் கிடைக்கும் தன்மை, மீன்கள் பிடிக்கும் உரிமை, மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை, விற்பனை மற்றும் ஆராய்ச்சி பிரிவு போன்றவை ஆக்கக்கூறுகளாகும். களப்பணியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தும் இந்த துறை, இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கற்றுத்தரப்படுகின்றது. மின்வளத்துறை படிப்பில், அக்குவாகல்சர், மீன்வள இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட், மீன்வள உயிரியல், பிராசசிங் டெக்னாலஜி, ஹைட்ரோகிராபி, மீன்வளத்துறை டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பிஎச்.டி., படிப்புகள் உள்ளன. இளநிலை படிப்பில் பி.எஸ்.சி.,(பிஷரீஸ்), பி.எப்.எஸ்சி.,(பிஷரீஸ்) போன்ற துறைகள் உள்ளன. இத்துறையில் சேருவதற்கு பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் விலங்கியல், மீன்வளத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. பயிலும் நிறுவனங்கள்:* மத்திய மீன்வளத்துறை கல்வி நிறுவனம் (சி.ஐ.எப்.இ.,), மும்பை (www.cife.edu.in)* மீன்வளத்துறை கல்லூரி, எர்ணாகுளம் (www.cofpanangad.org)* மீன்வளத்துறை கல்லூரி, மங்களூரு (www.kvafsu.kar.nic.in)* மீன்வளத்துறை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி வேலை வாய்ப்பு: மீன்வளத்துறையில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிக அளவில் நம் நாட்டில் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பை பெறலாம். மீன் பண்ணைகளை நிர்வகித்தல், மீன்வளத்துறை ஆய்வாளர், மீன் குஞ்சு பொரிக்கும் இடத்தின் மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் அமரலாம். அறிவியல் ரீதியாக மீன், நண்டு, இறால் பண்ணைகளை அமைத்து பல லட்சங்களை சம்பாதிக்கலாம். வண்ணமீன் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடலாம். வர்த்தக ரீதியாக முத்து உற்பத்தி செய்ய முடியும். மீன்கள் , இறால்களின் உடல் நோய்களைக் கண்டறியும் ஆய்வகங்களில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடலாம். இத்துறையில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அங்கு மீன் வளத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளமும் அதிக அளவில் தரப்படுகின்றது.