‘அமெரிக்க மாணவர் விசா’ எளிதா?
உயர்கல்வியை அமெரிக்காவில் தொடர விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க மாணவர் விசா பெறுவதற்காக, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார், சென்னை அமெரிக்க துணைத் துதரகத்தின் விசா பிரிவு தலைமை அதிகாரி, சார்லஸ் லுயோம ஓவர்ஸ்டிரீட். அவரது ஆலோசனைகள் இதோ: * அமெரிக்க மாணவர் விசா வழங்குவதற்கான, நேரடி விசாரணை சந்திப்பிற்கு 24 அலுவலக நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதால், மாணவர்கள் மிக விரைவாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். * விசா விண்ணப்பம் குறித்த தகவல்களை சரியான மற்றும் அதிகாரப்பூர்வமாக பெறுவது பாராட்டத்தக்கது. நண்பர்கள் மற்றும் முன்பின் தெரியாத நபர்கள், இணையதளங்கள் ஆகியவற்றின் மூலம் பெறுவதை முற்றிலும் தவிர்க்கவும். ஏன்னெனில், ஒருவருக்கு வழங்கப்படும் தகவல்கள் மற்றொருவருக்கு வேறுபடலாம். எனவே, தவறான தகவல்களை பெற்று உங்களது வாய்ப்புகளை இலக்க வேண்டாம். * துல்லியமான தகவல்களை பெற, அதிகாரப்பூர்வ அமெரிக்க கல்வி அலுவலகங்களான எஜுகேஷன் யு.எஸ்.ஏ., மற்றும் ஆக்கப்பூர்வமான வலைத்தளங்களை அணுகவும். * இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியான ஒப்பந்தங்களை மேம்படுத்துவது, அமெரிக்காவின் பிரதான செயல்பாடுகளில் ஒன்று. எனவே, தகுதியுள்ளவர்களுக்கு விசா நிச்சயம் கிடைக்கும். * கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க பயணத்திற்காக விசா வேண்டி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 2015ம் நிதி ஆண்டில், இந்தியா முழுவதும் 10 லட்சம் விசா வழங்கியுள்ளோம். அதில் இதுவரை இல்லாத அளவிற்கு 80 ஆயிரத்திற்கும் அதிகமான விசா மாணவர்களுக்கானவை.