உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.ஏ.பி.ஜி.இ.டி.,

மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் ஒன்று, அனைத்து இந்திய ஆயுஷ் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு -ஏ.ஐ.ஏ.பி.ஜி.இ.டி.,தேர்வின் முக்கியத்துவம்மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால், 2010ம் ஆண்டில் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஆயுர்வேதா எனும் நிறுவனம் தன்னாட்சி அதிகாரத்துடன் துவக்கப்பட்டது. பாரம்பரிய ஆயுர்வேத முறையின் தொன்மையான நடைமுறைகளுடன் நவீன தொழில்நுட்பத்தை இணைப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் ஆயுர்வேத மருத்துவ முறையில் பல்வேறு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது. அத்தகைய படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வே, 'ஆல் இந்தியா ஆயுஷ் போஸ்ட் கிராஜுவேட் என்ட்ரன்ஸ் டெஸ்ட்’. ஆயுஷ் அங்கீகாரம் பெற்ற நாட்டிலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை படிப்புகளில் இத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.படிப்புகள்:ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளில் வழங்கப்படும், * எம்.டி., * எம்.எஸ்.,ம்* பி.ஜி.டிப்ளமா படிப்புகள்கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட பி.ஏ.எம்.எஸ்., / பி.யு.எம்.எஸ்., / பி.எஸ்.எம்.எஸ்., / பி.எச்.எம்.எஸ்., பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இத்தேர்வில் 120 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஆகவே, 480 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் அளிக்கப்படும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படுகிறது. ஆயுர்வேத தேர்வில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். யுனானி தேர்வில் ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும். சித்த மருத்துவ தேர்வில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். ஹோமியோபதிக்கான தேர்வில் ஆங்கில மொழியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகிறது.தேர்வு நேரம்: 2 மணிநேரம்விண்ணப்பிக்கும் முறை: என்.டி.ஏ.,வின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மத்திய அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடும், விண்ணப்பக் கட்டணத்தில் சலுகையும் உண்டு. கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு:  https://ntaaiapget.nic.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !