கிரீன் பணிகளில் இந்திய இளைஞர்கள்
பிரிட்டன் இளவரசர் சார்லசால் ஏற்படுத்தப்பட்ட பிரின்சஸ் டிரஸ்ட் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில், பெரும்பாலான இந்திய இளைஞர்கள், சர்வதேச அளவில் நிலவில் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான பணிகளை மேற்கொள்ளவே விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‘பியூச்சர் ஆப் ஒர்க்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த சர்வதேச ஆராய்ச்சி அறிக்கையில், ‘85 சதவீத இந்திய இளைஞர்கள் இயற்கைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலான ‘கிரீன் ஜாப்’களை மேற்கொள்ள விரும்புகின்றனர் என்றும், 84 சதவீதத்தினர் சமுதாய சவால்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பருவநிலை சவால்களுக்கும் பல்உயரினங்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது நமது கடமை என்று இந்திய இளைஞர்கள் நினைப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தற்போது 4 சதவீதம் பேர் மட்டுமே அத்தகைய ’கிரீன்’ பணிகளை முதன்மை பணியாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.