உள்ளூர் செய்திகள்

பி.எஸ்சி., படிப்பு

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் அளிக்கும் வகையிலான, பி.எஸ்சி., படிப்பை சென்னை பல்கலைக்கழகம் வழங்குகிறது.கால அளவு: 3 ஆண்டுகள்படிப்பு விபரம்: கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியியல் ஆகிய அறிவியல் பாடங்கள் கலந்த பொதுவான பாடத்திட்டம் முதல் 2 ஆண்டுகளில் கற்பிக்கப்படும். மூன்றாவது ஆண்டில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முதன்மை பாடத்தை தேர்வு செய்துகொள்ளலாம். சர்வதேச அளவில், முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் வழங்கப்படும் இப்படிப்பில், துறை சார்ந்த தொழில்துறை நிபுணர்களால் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மெல்பர்ன் பல்கலைக்கழக தரநிலைக்கு ஏற்ப இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.தரநிலை:மேலும், இந்த சுயநிதி படிப்பின் பாடத்திட்டங்கள், தரம், கற்பித்தல் ஆகியவை மெல்பர்ன் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் வழங்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேரடியாக பாடம் நடத்தும் நிலையில், குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மெல்பர்ன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விர்ச்சுவல் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிப்பார்கள். செயல்முறை வகுப்பு:முதல் 2 ஆண்டுகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 6 செயல்முறை வகுப்புகள் இடம்பெறுகின்றன. மேலும், ஐ.இ.எல்.டி.எஸ்., அடிப்படையிலான ஆங்கில மொழிப்பாடமும் இடம்பெறும். மூன்றாம் ஆண்டில் குறிப்பிட்ட பிரிவில் குறுகியகால ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படும் முறை: 11ம் மற்றும் 12ம் வகுப்பு அளவிலான இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம்  பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதன்வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்கும் முறை: https://egovernance.unom.ac.in/blended/ எனும் சென்னை பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு:இ-மெயில்: blendedunom@gmail.com இணையதளம்: www.unom.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !