ரூ.200 கோடியில் ஆற்றல் சார் கல்வி மையம்
ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ஐ.ஐ.டி.,(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) ரூ.200 கோடி செலவில் ஆற்றல் சார் கல்வி மையம் ஒன்றை தனது வளாகத்தில் நிறுவ முடிவுசெய்துள்ளது. மின்சக்தி குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் பேசிய புவனேஸ்வர் ஐ.ஐ.டி.,யின் அகாடமிக் டீன் கணபதி பாண்டே இதனை தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகள் மின் உற்பத்தி போன்ற ஆற்றல் சார் வளத்தை பெருக்க பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் கூட இதுபோன்ற ஆராய்ச்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதை பாண்டே சுட்டிக்காட்டியுள்ளார். எனவே ஆற்றல் சார் கல்வி மையம் இவற்றை குறைந்த செலவில் மாற்று வழியில் உற்பத்தி செய்யும் வகையிலான ஆராய்ச்சிகளில் ஈடுபடஉள்ளதாக கணபதி பாண்டே தெரிவித்துள்ளார்.