இசைத்துறை - படிப்புகளும், பணி வாய்ப்புகளும்...
மனிதனின் மிகப்பெரிய சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று இசை. இசை என்பது ஒரு உலகளாவிய உன்னத ஒலி. மனிதர்களின் மனதில் பல்வேறான உணர்வு நிலைகளை ஏற்படுத்தும் வல்லமை இசைக்கு உண்டு. இசை ஒரு தடை செய்யப்பட்ட விஷயம் என்று சொல்வோரும் உலகில் உண்டு. ஆனாலும், அவர்களைப் போன்றவர்களும் தங்களின் வழிபாட்டை இசை வடிவிலேயே நடத்துகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இசையால் மயங்காத உயிர்கள் உலகில் இலலை என்பது பழமொழி. அதை எவரும் மறுக்க முடியாது. கேட்கும் திறனுள்ள ஒவ்வொரு உயிரியும் இசையால் பாதிக்கப்படுவதே. இசைத்துறை பணி வாய்ப்புகள் இயல்பான திறமை, உண்மையான ஆர்வம், அக்கறை மற்றும் ஊக்கம் ஆகிய பண்புகள் ஒருவர் இசைத்துறையில் வெற்றியடைவதற்கு முக்கியமானவை. உதாரணமாக, ஒருவருக்கு இயல்பிலேயே பாடும் திறன் இருக்கலாம். ஆனால், அதையே ஒரு தொழிலாக மேற்கொள்வதற்கு நல்ல பயிற்சி தேவை. இசைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதென்பது, இசைத்துறையில் நுழைவதற்கு ஒரு முக்கிய நுழைவு வாயில் என்பது உண்மைதான் என்றாலும், அபரிமிதமான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியம். இசைத் துறையில் தடம் பதிக்க நினைக்கும் ஒருவருக்கு, இசையின் மீது காதல், இசை நுட்ப அறிவு, அதாவது, நேரம் மற்றும் ரிதம் ஆகியவற்றின் அறிவு, பன்முகத் திறமை, படைப்பாக்கத் திறன் மற்றும் மேடையில் செயல்படக்கூடிய தன்னம்பிக்கை போன்றவை வேண்டும். இவைதவிர, சரியான நபர்களுடனான தொடர்பு, பயிற்சி பெறுவதற்கான பண வசதி, திறமையை சந்தைப்படுத்துவதற்கான டெமோ கேசட்டுகள் உள்ளிட்டவையும் முக்கியம். இசைத் துறையில் படிப்புகளை மேற்கொண்டோர், அதிகளவில், இசை ஆசிரியர்களாக ஆவது, கச்சேரிகளில் பாடுதல் மற்றும் இசைக் கருவிகளை இசைத்தல் உள்ளிட்ட விஷயங்களையே அதிகம் சிந்தித்து, அவைகளை நோக்கியே செல்கிறார்கள் என்ற விமர்சனம் உண்டு. ஆனால், அவைகளைத் தாண்டி, கம்போசர், பாடல் எழுதுபவர், இசை வெளியீட்டாளர், இசை தொடர்பான பத்திரிகையாளர், டிஸ்க் ஜாக்கி, வீடியோ ஜாக்கி, மியூசிக் தெரபிஸ்ட் மற்றும் ஆர்டிஸ்ட் மேனேஜர் உள்ளிட்ட பல்வேறான பணி வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பிறகான காலகட்டத்தில், இசைத் துறை பணி வாய்ப்புகள் பெருகிக்கொண்டே செல்கின்றன. பணி வாய்ப்புகளை வழங்கும் இடங்கள் * தொலைக்காட்சி அலைவரிசைகள்(Channels)* AIR மற்றும் தனியார் FM அலைவரிசை நிலையங்கள்* இசை அலைவரிசைகள்* கலை மற்றும் பொதுமக்கள் தொடர்புக்கான அரசு துறைகள்* தயாரிப்பு மையங்கள்* இசை குழுக்கள்* இசை ஆய்வு மையங்கள்* இசை நிறுவனங்கள்* இசைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கலாகேந்திரா* மருத்துவமனைகளில் மியூசிக் தெரபிஸ்ட் பணி* பத்திரிகைகள் இவைதவிர, சொந்தமாக, நமது இல்லத்தில் இசை வகுப்புகளை நடத்துதல் மற்றும் இசைப் பள்ளிகளை ஏற்படுத்தி நடத்துதல். இசை தொடர்பான சில பணிகள் Music Composer / Song Writer எழுதும் திறமையும், இசைத் திறமையும் இயல்பிலேயே உடையவர்கள் இத்துறைக்கு வரலாம். ஒரு கம்போசர் என்பவர், இசையை உருவாக்கி எழுதி, பின்னர் அதை பாடல் வரிகளுடன் பொருத்தமான முறையில் இணைத்து, ஒரு புதிய பாடலை உருவாக்குகிறார். பாடகர்கள் இவர்கள், தனியாகவோ அல்லது குழுவாகவோ, இசைக் கருவிகளுடனோ அல்லது இல்லாமலோ செயல்படுகிறார்கள். புரடியூசர் இசை பதிவின் பல்வேறான அம்சங்கள் மற்றும் கூறுகளை இணைத்து, சரியான முறையில் பொருத்தி, ஒரு முழுமையான கலைப் படைப்பாக ரசிகர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். ஆர்டிஸ்ட் மேனேஜ்மென்ட் இதுவொரு பெரியளவில் வளர்ந்துவரும் துறை. திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் வணிக முறையில் பேச்சு நடத்துதல் உள்ளிட்ட பல பணிகள் இதில் அடக்கம். தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில், கலைஞர்களுக்கான இவர்கள் வாய்ப்பு பெறுகிறார்கள். இசை பத்திரிகையாளர் இசை நிகழ்ச்சி தொடர்பான விமர்சனங்களை பத்திரிகைகளில் எழுதுதல் மற்றும் அதுதொடர்பான இதர தகவல்களை அளிப்பது. இசை ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளிகள் முதல், கல்லூரிகள் தொடங்கி, பல்கலைகள் வரை, இசை ஆசிரியர்களுக்கான தேவை எங்கும் நிறைந்துள்ளது. வீடியோ ஜாக்கி மற்றும் டிஸ்க் ஜாக்கி பல்வேறான புதிய இசை அலைவரிசைகளின் வருகையை அடுத்து, மேற்கண்ட பணிகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. இசை வீடியோவை அறிமுகம் செய்தல், கலைஞர்களுடன் நேர்முகம் செய்தல் உள்ளிட்டவை இவர்களின் முக்கியப் பணிகள். தமிழகத்தின் இசை கல்வி நிறுவனங்கள் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறான இசைக் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழக அளவில் பார்த்தால், குறிப்பாக, பல்வேறான இசைக் கல்வி நிறுவனங்கள் இருந்தாலும், அவற்றில் அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள இசைத் துறைகள் முக்கியமானவை. தமிழகத்திலுள்ள அரசு இசைக் கல்லூரிகள் அரசு இசைக் கல்லூரி - சென்னைஅரசு இசைக் கல்லூரி - மதுரைஅரசு இசைக் கல்லூரி - கோவைஅரசு இசைக் கல்லூரி - திருவையாறு இசைக் கல்லூரி பகுதிநேர மையங்கள் ரெகுலர் முறையில் கல்லூரிக்கு செல்ல முடியாதவர்கள் மற்றும் பணிபுரிவோர் பயன்பெறு வகையில், மாலை நேரங்களில் செயல்படக்கூடிய பகுதிநேர இசைக் கல்லூரி மையங்கள் செயல்படுகின்றன. தற்போதை நிலையில், சென்னை மற்றும் மதுரை ஆகிய 2 இடங்களில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கலைக் காவேரி கவின்கலை கல்லூரி - திருச்சி இது ஒரு அரசு உதவிபெறும் கல்லூரியாகும். இக்கல்லூரியின் நிர்வாக அதிகாரம், கலை மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. வழங்கப்படும் படிப்புகள் மேற்கண்ட அரசு கல்வி நிறுவனங்களில் எத்தகைய இசைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன என்பதை இங்கே காணலாம். அரசு இசைக் கல்லூரி - சென்னை கடந்த 1949ம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டது. மரபு வழியிலான இசை(folk art), பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், கடம், கஞ்சிரா, நாதஸ்வரம் மற்றும் தவில் போன்ற வாத்தியக் கருவிகளின் இசை ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவைதவிர, வாய்ப்பாட்டு இசையில்(முதுகலை இசை கலைமணி), 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பு, நட்டுவாங்கத்தில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு, இசை ஆசிரியர்கள் பயிற்சியில், 1 ஆண்டு டிப்ளமோ படிப்பு போன்றவையும் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, மொரீஷியஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஜப்பான், ஆப்ரிக்க நாடுகள் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறான வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், இங்கு வந்து இசைக் கல்வியை பயில்கிறார்கள். மேலும், இந்தியாவின் இதர மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இக்கல்லூரியில் சேர்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அரசு இசைக் கல்லூரி - மதுரை கடந்த 1979ம் ஆண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், புல்லாங்குழல், நாதஸ்வரம், பரதநாட்டியம், பாரம்பரிய இசை ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பும், இசை ஆசிரியர் பயிற்சியில் 1 ஆண்டு டிப்ளமோ படிப்பும் இங்கே வழங்கப்படுகிறது. அரசு இசைக் கல்லூரி - கோவை கடந்த 1993ம் ஆண்டு இக்கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. வாய்ப்பாட்டு வயலின், வீணை, பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளும், இசை ஆசிரியர்கள் பயிற்சியில் 1 ஆண்டு டிப்ளமோ படிப்பும் வழங்கப்படுகிறது. அரசு இசைக் கல்லூரி - திருவையாறு கடந்த 1997ம் ஆண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், பரத நாட்டியம், நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளும், வாய்ப்பாட்டில்(vocal), 3 ஆண்டு பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. இசைக் கல்லூரி பகுதிநேர மையங்கள் சென்னை, தியாகராய நகர் மையத்தில், வாய்ப்பாட்டு, வீணை மற்றும் வயலின் ஆகிய பிரிவுகளில், 2 ஆண்டு சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. வாய்ப்பாட்டு, வீணை, வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 2 ஆண்டு சான்றிதழ் படிப்பு, சென்னை அரசு இசைக் கல்லூரி வளாகத்திலும், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் மற்றும் பரத நாட்டியம் ஆகிய பிரிவுகளில் 2 ஆண்டு சான்றிதழ் படிப்புகள், மதுரை மையத்திலும் வழங்கப்படுகின்றன. கலைக் காவேரி கவின்கலை கல்லூரி 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு, 3 ஆண்டு பட்டப் படிப்புகள், 2 ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புகள் போன்றவை கீழ்கண்ட பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை மற்றும் மிருதங்கம். அரசு மாவட்ட இசைப் பள்ளிகள் இசை ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, திருவாரூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், கடந்த 1997ம் ஆண்டு அரசு மாவட்ட இசைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, கரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அரசு மாவட்ட இசைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. மேற்கண்ட இசைப் பள்ளிகள், வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில், தேவாரம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில், 3 ஆண்டு சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. இசைக் கல்வியை வழங்கும் தமிழகத்தின் இதர முக்கிய கல்வி நிறுவனங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம்சென்னைப் பல்கலைக்கழகம்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்பாரதியார் பல்கலைக்கழகம்சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி - திருச்சிஸ்ரீலஸ்ரி கசிவாசி சுவாமிநாதா சுவாமிகள் கல்லூரி - திருத்தணி பி.எஸ்.ஜி., கல்லூரி - கோவைராணி மேரி கல்லூரி - சென்னைருக்மணிதேவி கவின்கலை கல்லூரி - சென்னைமனையியல் மற்றும் உயர் கல்விக்கான அவினாசிலிங்கம் பெண்கள் கல்வி நிறுவனம் - கோவை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இசைப் படிப்புகளுக்கான இந்திய அளவில் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் பனாரஸ் இந்து பல்கலை, பனாரஸ்ஆஜ்மீர் இசைக் கல்லூரி, ஆஜ்மீர்பெங்களூர் பல்கலைக்கழகம், பெங்களூர்பன்சிலால் பத்ருகா ஸ்கூல் ஆப் மியூசிக் அன்ட் டான்ஸ், ஐதராபாத்பெங்கால் இசைக் கல்லூரி, கொல்கத்தாபாரதா மியூசிக் டான்ஸ் இன்ஸ்டிட்யூட் அன்ட் ரிசர்ச் சென்டர், திருவனந்தபுரம்பாரதியார் பல்கலைக்கூடம், புதுச்சேரிபிரிட்ஜ் மியூசிக் அகடமி, டில்லிலலித் கலா கேந்திரா, புனேசரஸ்வதி இசைக் கல்லூரி, டில்லிதான்சேன் சங்கீத் மகாவித்யாலயா, டில்லிஸ்கூல் ஆப் சிம்பொனி, டில்லிபத்மம் ஸ்கூல் ஆப் பெர்பார்மிங் ஆர்ட்ஸ், பெங்களூர்.