தாவர நோய்க்கூறு நிபுணரின் பணி முக்கியத்துவம் எப்படிப்பட்டது?
தாவரங்களை தாக்கும் நோய்கள் குறித்து படிக்கும் பிளான்ட் பேத்தாலஜி எனும் படிப்பு, தாவர பாதுகாப்பு அறிவியலின் ஒரு பிரிவாகும். சுற்றுச்சூழல் மற்றும் பிறவகை கிருமிகளால், எவ்வாறு, தாவரங்களில் நோய்கள் உண்டாகின்றன என்பதை அறிந்து, தாவரங்களுக்கு ஏற்படும் நோய்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வது தொடர்பானதுதான் இப்படிப்பு. ஒரு தாவர நோய்க்கூறு மருத்துவர்(Plant Pathologist), நோய்களினின்று தாவரங்களை பாதுகாப்பது, நோய்களைத் தடுப்பது மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை செய்கிறார் மற்றும் தனது நோக்கங்களை வெற்றிபெற செய்யும் வகையில், அவர் பல புத்தாக்க வழிகளையும் கண்டறிகிறார். இந்த உலகை உயிரோடும், அழகாயும் வைத்திருப்பவை தாவரங்களே. எனவே, அவற்றை எந்தளவு பாதுகாக்கிறோமோ, அந்தளவிற்கு இந்த பூமி செழுமையாகவும், நமது வாழ்க்கை ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்கும். எனவே, அத்தகைய உன்னதமான பணிக்கு, விருப்பமுள்ள நபர்களை சிறப்பான முறையில் தயார்படுத்துவது மிக முக்கியம். ஒரு நாட்டின் வேளாண் உற்பத்தியை அதிகரித்து, அதை சிறப்பாக்கும் பணியில் தாவர நோய்க்கூறு மருத்துவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அவர்கள், தாவரங்களை, நோய்களின் பிடியிலிருந்து காக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். பணி வாய்ப்புகள் இவர்களுக்கான பணி வாய்ப்புகள், பல்வேறு இடங்களில் பரவியுள்ளன. பொதுவாக, ஆராய்ச்சி ஆய்வகங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழுள்ள வேளாண் மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் அவர்களுக்கான சிறந்த பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. இவைதவிர, அக்ரோகெமிக்கல் நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், உர நிறுவனங்கள், வேளாண் ஆலோசனை மையங்கள் ஆகியவற்றிலும் அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். வெளிநாடுகளில்... ஒரு தாவர நோய்க்கூறு மருத்துவருக்கு உள்நாட்டில் மட்டும்தான் அரசு மற்றும் தனியார் பணி வாய்ப்புகள் இருக்கின்றன என்றில்லை. வெளிநாடுகளில், அவர்களுக்கென்று அதிக வேலை வாய்ப்புகள், நல்ல சம்பளத்தில் காத்துக் கொண்டுள்ளன. அவர்களுக்கான வாய்ப்புகள் எப்போதும் சுருங்காது என்றே சொல்லப்படுகிறது. இத்துறை சார்ந்த படிப்பை மேற்கொள்வதற்கான இந்திய கல்வி நிறுவனங்கள் ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலை - ஐதராபாத்பிதான் சந்திர ரிஷி விஸ்வ வித்யாலயா - ஹாரிங்கடாபிர்சா வேளாண் பல்கலைக்கழகம் - ராஞ்சிவேளாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான சந்திர சேகர் ஆசாத் பல்கலைக்கழகம் - கான்பூர்வேளாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நந்த்ரா தேவ் பல்கலைக்கழகம் - பாசியாபாத்பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் - லூதியானாவேளாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்தார் வல்லபாய் படேல் பல்கலைக்கழகம் - மீரட்வேளாண் அறிவியல்கள் பல்கலைக்கழகம் - தார்வாத்.