தேசிய மற்றும் சர்வதேச அளவில் தகுதியான பணியாளர் பற்றாக்குறை
இந்தியாவில் 64% நிறுவனங்களுக்கு, தங்களுக்கு தேவையான அளவில் சரியான தகுதியுள்ள நபர்களைத் தேடி, பணிக்கு அமர்த்திக் கொள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருப்பதாக ஒரு முக்கிய ஆய்வு தெரிவிக்கிறது. முக்கியமாக, அக்கவுன்டிங், பைனான்ஸ் மற்றும் ஐ.டி. ஆகிய துறைகளில், இத்தட்டுப்பாடு அதிகம் இருப்பதாக, மேன்பவர் குரூப் சர்வே தெரிவிக்கிறது. அந்த சர்வே பற்றிய விபரம் உலகளாவிய அளவில் பார்த்தால், 36% நிறுவனங்கள், தங்களுக்கு தகுதியான ஆட்களை பணியமர்த்திக் கொள்ளும் செயல்பாட்டில் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அந்த எண்ணிக்கை 64% என்பதாக உள்ளது. திறன்வாய்ந்த பணிகளை மேற்கொள்ள தகுதியான பணியாளர்கள் கிடைப்பது தொடர்ந்து பற்றாக்குறையாகவே உள்ளது. அக்கவுன்டிங் மற்றும் பைனான்ஸ் துறையை எடுத்துக்கொண்டால், அதில் தகுதிவாய்ந்த பணியாளர்களின் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. ஏனெனில், அக்கவுன்டன்டுகள் மற்றும் ஆடிட்டர்கள் ஆகியோர் வணிக உலகில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களின் பணி பொறுப்புகள் பரவலானவை. தொடர்புடைய புத்தகங்களை பாதுகாத்தல் முதல் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற வியூகரீதியான திட்டமிடுதல் வரை பல பணிகளை மேற்கொள்கிறார்கள். செலவினங்களை குறைத்தல் மற்றும் லாபத்தை அதிகரித்தல் தொடர்பான ஆலோசனைகளை நிறுவனங்களுக்கு அவர்கள் அளிக்கிறார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில், பல்வேறான வணிக நடவடிக்கைகளும், ஆன்லைனில் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவற்றுக்கான தொழில்நுட்ப பணியை மேற்கொள்ள, ஐ.டி. நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது. அதேபோன்று, வரும் நாட்களில் வேறு பல பணிகளுக்கும் அதிக தேவை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவை, ஆசிரியர்கள்பொறியாளர்கள்மேலாண்மை அதிகாரிமார்க்கெட்டிங் பணியாளர்பொதுமக்கள் தொடர்பு அதிகாரிதகவல்தொடர்பு அலுவலர்தொழில்நுட்ப பணியாளர்புராஜெக்ட் மேலாளர்சட்ட ஆலோசனை அலுவலர் போன்றவை. உலகளாவிய அளவில் பார்த்தால், ஜப்பான் நாட்டு நிறுவனங்கள், அதிக ஊழியர் பற்றாக்குறை சந்திக்கின்றன. அங்கே, 5 நபர்களில், 4 பேர், தொடக்க கால பணிகளில் வெற்றிபெற சிரமப்படுகிறார்கள். மேலும், பெரு, பிரேசில், துருக்கி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அதிகளவு தகுதியான பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. அதேசமயம், அயர்லாந்து நாட்டில் வெறும் 2 சதவீதமும், ஸ்பெயின் நாட்டில் 3 சதவீதமும், நெதர்லாந்து நாட்டில் 5 சதவீதமும் மட்டுமே தகுதியான ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய அளவில், திறன்வாய்ந்த* வணிக பணியாளர்கள்* பொறியாளர்கள்* விற்பனை பிரதிநிதிகள் ஆகியவர்களை பெறுவதுதான், நிறுவனங்களுக்கு கடினமான ஒரு பணியாக இருக்கிறது.