சமூக ஈடுபாட்டிற்கான உதவித்தொகை
சமூக மாற்றத்திற்கான செயல்களில் ஆர்வம் உள்ள இந்திய இளைஞர்களுக்கு 'இன்லாக்ஸ் பெல்லோஷிப் பார் சோசியல் எங்கேஜ்மெண்ட்' திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.முக்கியத்துவம்இளைஞர்களிடம் விரிவான உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கவும், முக்கியத்துவம் வாய்ந்த பொது சவால்களில் பணியாற்றவும் இந்த உதவித்தொகை திட்டம் ஊக்குவிக்கிறது. பொது பிரச்சனைகளுக்கான மாற்று வழிகளை ஆராய்வதற்கும், சுதந்திரமான முடிவுகளை எடுப்பதற்கான நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கிறது.பெரும்பாலான இளைஞர்கள் படித்துமுடித்த உடன் வேலைவாய்ப்பை பெறுவதையே நோகமாகக் கொண்டுள்ளனர். இச்சூழலில் அவர்களிடம் விமர்சன சிந்தனை மற்றும் சமூகம் சார்ந்த பரந்த பார்வையை வளர்ப்பதற்கு இந்த உதவித்தொகை திட்டம் வழிவகுக்கிறது. மேலும், பல திறமையான இளைஞர்கள் சமூகத்துடன் அர்த்தமுள்ள வழியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது. உதவித்தொகை விபரம்:உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அவர்கள் விரும்பும் நிபுணர்களிடம் இணைந்து சமூக மாற்றத்திற்கான திட்டங்களில் ஈடுபட வேண்டும். இந்த உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றபோதிலும், திருப்திகரமான செயல்பாடு அடிப்படையிலேயே அத்தைகைய முழு காலம் நீட்டிக்கப்படுகிறது. மற்றபடி, முதல் ஆறு மாதம் தகுதிகாணும் காலமாக நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பிடம் மற்றும் பயிற்சிபெறும் நகரத்தைப் பொறுத்து, 25 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட திட்டம் மற்றும் சிறப்புத்தன்மை அடிப்படையில் ரூ. 20 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படுகிறது.தகுதிகள்:* இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.* ஜனவரி 1, 1989 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும்.* இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.* இளநிலை பட்டம் இல்லாத பட்சத்தில், குறைந்தது மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.* எந்த படிப்பிலோ அல்லது பிஎச்.டி., ஆராய்ச்சியிலோ ஈடுபடுபவர்களுக்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31விபரங்களுக்கு: https://inlaksfoundation.org/opportunities/