வெளிநாட்டு கல்விக்கு உதவித்தொகை!
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கங்களால் வழங்கப்படும் உதவித்தொகைகளை அறிந்துகொள்வது, மாணவர்களின் சர்வதேச உயர்கல்வி கனவை நிஜமாக்க பெரிதும் உதவும்! ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில், முதுநிலை மற்றும் பிஎச்.டி., பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மெரிட் அடிப்படையில், ஆஸ்திரேலியா அரசால் இன்டிவர் ஸ்காலர்ஷிப் அன்ட் பெலோஷிப் வழங்கப்படுகிறது.உதவித்தொகை: பிஎச்.டி., படிப்பில் ஆண்டுக்கு ரூ. 12,900,900 மற்றும் முதுநிலைப்படிப்பில் ஆண்டுக்கு ரூ. 6,600,300 மேலும் விவரங்களுக்கு: http://internationaleducation.gov.au/endeavour ஜப்பான்எய்ச்சி பல்கலைக்கழகத்தில் ஆய்வு துறை மற்றும் முதுநிலை பட்டப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த 10 மாணவர்களுக்கு, எய்ச்சி அரசாங்க நிர்வாகிகள் குழு மூலம்உதவித்தொகை வழங்கப்படுகின்றன.உதவித்தொகை: மாதம் ரூ. 82,000மேலும் விவரங்களுக்கு: www.pref.aichi.jp சீனா2 ஆண்டுகள் கொண்ட முதுநிலை பாடப் பிரிவில், பொது நிர்வாகம் (பப்லிக் அட்மினிஸ்டரேஷன்) படிக்கும், சிறந்த 15 மாணவர்களுக்கு, ஏசியன் பியூச்சர் லீடர்ஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ், ஜேஜியாங் பல்கலைக்கழகம் உதவித்தொகையை வழங்குகிறது.உதவித்தொகை: மாதம் ரூ. 61,000மேலும் விவரங்களுக்கு: iczu.zju.edu.cn சிங்கப்பூர் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில், இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் சிறந்த 4 மாணவர்களைத் தேர்வு செய்து, சிங்கப்பூர் வங்கியால் நிர்வகிக்கப்படும் தனியார் துறை உதவித்தொகையான டாக்டர்.கோ கெங் ஸ்வீ ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ. 3,05,700 மேலும் விவரங்களுக்கு: www.pscscholarships.gov.sg கொரியாசியோல் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.பி.எஸ்., அறக்கட்டளை இணைந்து, மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பிரிவில் முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிக்கும் சிறந்த 5 மாணவர்களுக்கு, சில்க்-ரோடு ஸ்காலர்ஷிப் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.உதவித்தொகை: மாதம், 34 ஆயிரம் ரூபாய்.மேலும் விவரங்களுக்கு: www.useoul.edu ஜெர்மனிஜெர்மனியில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு,ஜெர்மன் அகாடமிக் எக்ஸ்சேஞ் சர்வீஸ் (டாட்) மூலம் கட்டடக்கலை, மேலாண்மை, தொழில்நுட்பம் அல்லது கலை மற்றும் இலக்கியம் போன்ற படிப்புகளில், இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., பயிலும் சிறந்த 300 மாணவர்களுக்கு, ‘டாட்’ உதவித்தொகை வழங்கப்படுகிறது.உதவித்தொகை: மாதம், இளநிலை மாணவர்களுக்கு 48 ஆயிரம் ரூபாய். முதுநிலை மாணவர்களுக்கு 55 ஆயிரம் ரூபாய் மற்றும் பிஎச்.டி., மாணவர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய்.மேலும் விவரங்ளுக்கு: www.daaddelhi.org/en/ இங்கிலாந்து சயின்ஸ் அன்ட் இன்னொவேஷன், மீடியா அன்ட் கம்யூனிகேஷன், மேனேஜ்மன்ட் அன்ட் லீடர்ஷிப், ஹெல்த்கேர், சைபர் செக்யூரிட்டி போன்ற ஒரு வருட முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் சிறந்த 600 மாணவர்களுக்கு, இங்கிலாந்து அரசாங்கத்தால், ‘பிரிட்டிஷ் சேவெய்ங் ஸ்காலர்ஷிப்’ என்ற உதவித்தொகை வழங்கப்படுகிறது.உதவித்தொகை: ஆண்டுக்கு, 13 லட்சம் ரூபாய்.மேலும் விவரங்களுக்கு: www.chevening.org அமெரிக்காஅமெரிக்க பல்கலைக்கழகங்களில், முதுகலை மற்றும் பி.எச்டி., பட்டப் படிப்பு படிக்கும், இந்திய மாணவர்களுக்கு அவர்களது திறமைகளின் அடிப்படையில், அமெரிக்கா அரசங்கத்தால் புல்பிரைட்-நேரு பெல்லோஷிப் வழங்கப்படுகின்றன. உதவித்தொகை: அமெரிக்க அரசாங்க விதிமுறைகளின் படிஉதவித்தொகை வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு: www.usief.org.in குறிப்பு: ரூபாயின் சர்வதேச மதிப்பை பொறுத்து, உதவித்தொகையின் மதிப்பு மாறுபடலாம்.