தனித்துவமான அனுபவத்திற்கு தென் ஆப்ரிக்கா!
மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் வரலாற்று நிகழ்வுகளால் அல்லது கிரிக்கெட் போட்டிகளால் தான் தென் ஆப்ரிக்காவை நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால், குறைந்த கல்வி கட்டணம், படிப்பதற்கு ஏதுவான சுற்றுச்சூழலுடன், தரமான உயர்கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது தென் ஆப்ரிக்கா! உலக அளவில் சிறந்த 150 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகம் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்காவில் வழங்கப்படும் அறிவியல், சட்டம், மேலாண்மை, வணிகவியல், மானிடவியல், சுகாதார அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற பட்டப் படிப்புகள், மாணவர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்பினை அளிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் முனைவோராகவும் பாதை வகுக்கின்றன. கல்வி முறை: இளநிலைப் பட்டப்படிப்பில், ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர் வீதம், மூன்று ஆண்டுகள் கொண்ட கால அளவில் ஒரு முதன்மை (மேஜர்) பாடப்பிரிவை எடுத்து படிக்கலாம். அதேசமயம், பல்கலைக்கழகங்களை பொறுத்து, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் இரண்டாவது பாடப்பிரிவையும் தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பும் அங்கு உண்டு. பல்கலைக்கழக வகைகள்: தென் ஆபிரிக்காவின் அரசு பல்கலைக்கழகங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, பாரம்பரிய பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் (தொழிற்பயிற்சி சார்ந்த கல்வி) மற்றும் விரிவான பல்கலைக்கழகங்கள் (முதல் இரண்டு முறையையும் உள்ளடக்கிய கல்வி). சிறந்த பல்கலைக்கழகங்கள்: கேப் டவுன் பல்கலைக்கழகம் பிரபலமான படிப்புகள்: வணிகவியல், பொறியியல், மானிடவியல் மற்றும் சட்டம்ஆண்டு கட்டணம்: ரூ. 2.6 லட்சம் முதல்இணையதளம்: www.uct.ac.za டபில்யூ.ஐ.டி.எஸ்., பல்கலைக்கழகம் பிரபலமான படிப்புகள்: வணிகவியல், மானிடவியல் மற்றும் சட்டம்ஆண்டு கட்டணம்: ரூ. 2.3 லட்சம் முதல்இணையதளம்: www.wits.ac.za பிரி ஸ்டேட் பல்கலைக்கழகம் பிரபலமான படிப்புகள்: வணிகவியல், மானிடவியல் ஆண்டு கட்டணம்: ரூ. 1.3 லட்சம் முதல்இணையதளம்: www.ufs.ac.za பிரிட்டோரியா பல்கலைக்கழகம் பிரபலமான படிப்புகள்: பொறியியல், மேலாண்மைஆண்டு கட்டணம்: ரூ. 5 லட்சம் முதல்இணையதளம்: www.up.ac.za ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகம்பிரபலமான படிப்புகள்: கட்டடக்கலை,வடிவமைப்பு, மற்றும் கலைக் கல்விஆண்டு கட்டணம்: ரூ. 2.3 லட்சம் முதல்இணையதளம்: www.uj.ac.za