உள்ளூர் செய்திகள்

தினமலர் - பட்டம் ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், பதில் சொல்; பரிசு வெல்

'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி, விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 16 மாணவர்கள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து, 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ராபின், தலைமை ஆசிரியர் சுதா டாமினிக் ஆகியோர் தலைமை தாங்கினர்.போட்டியில், 7ம் வகுப்பு மாணவி ரித்திகா, 6ம் வகுப்பு மாணவி பவந்திகா முதலிடமும், 9ம் வகுப்பு மாணவிகள் ஹரினி, விஷாலினி இரண்டாம் இடமும் படித்தனர். வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ராபின், தலைமை ஆசிரியர் சுதா டாமினிக் ஆகியோர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்