உள்ளூர் செய்திகள்

ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்; கருணாநிதி வலியுறுத்தல்

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை விபரம்: ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். எனவே அரசு ஆவன செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பதுதான் முறை. கேள்வி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களை இழந்து, பல நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில், தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அறிவித்திருக்கிறார்களே? பதில்: இந்த ஆண்டு மாணவர்கள் தேர்வுக்கே தயாராகாத நிலையில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரண உதவித் தொகை பெரியவர்களுக்கு உதவியாக இருக்கலாம். ஆனால் மாணவர்களைப் பொறுத்தவரை தேர்வுகள் முக்கியமானது. மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மாணவச் சமுதாயத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். எனவே அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்