உள்ளூர் செய்திகள்

சீக்கிரம் வாருங்கள்: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

பெங்களூரு: அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல், கற்றல் தரத்தை அதிகரித்து கொள்வதற்காக குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வந்து, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பாக கல்வி துறை கமிஷனர் காவேரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளிகளில் கற்பித்தல், கற்றல் தரத்தை அதிகரிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி, அறிவு, சமூக வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் தங்கள் கடமையை போதுமான அளவு செய்ய வேண்டும்.ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், பிற இணை ஆசிரியர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன் பள்ளிக்கு வந்து, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விடுமுறையில் செல்லும் போதோ, வேறு பணி காரணமாக வெளியே செல்லும் போதோ, முறைப்படி கள கல்வி அதிகாரியிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும்.பள்ளி பணி நேரத்தில் பிளாக் கல்வி அலுவலகம், பொது கல்வி துணை இயக்குனரகம் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களின் கல்வித்தரம் ஒவ்வொரு பாடம் வாரியாக சரிபார்த்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்