விஷன் நெக்ஸ்ட் -ல் காணலாம் ட்ரெண்டிங் ஆடை வடிவமைப்புகள்
சென்னை: விஷன் நெக்ஸ்ட் ப்ரயோகஷளா என்ற அமைப்பானது மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஆடை வடிவமைப்பு படங்களைக் கொண்ட தரவுத்தொகுப்பை உருவாக்கியுள்ளது.விஷன் நெக்ஸ்ட் ப்ரயோகஷளா என்ற இந்திய அரசின் ஜவுளி துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் அமைப்பானது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி, மாண்புமிகு ஜவுளித்துறை அமைச்சரால் பரிதி 24x25 என்ற முதல் இருமொழி பேஷன் ட்ரெண்ட் புத்தகம் புதுடில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.புத்தகத்தின் மின்னணு நகல் 2000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் இணையதளம் 23,000 மொத்த பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. விஷன் நெக்ஸ்ட், 70,000ம் மேற்பட்ட முதல் நிலை ஆடை படங்கள் மற்றும் 280,000ம் அதிகமான இரண்டாம் நிலை படங்கள் அடங்கிய தரவுத்தொகுப்பை உருவாக்கியுள்ளது. இது பாணி, நிறம், மற்றும் பிராந்திய தாக்கங்களை அடையாளம் காண உதவுகிறது.800ம் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, விஷன் நெக்ஸ்ட் தரவுத்தொகுப்பின் பகுதியாக இணைக்கப்பட்டுள்ளனர். விஷன் நெக்ஸ்ட் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் நிப்ட் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு, https://visionxt.in/ இணையதளத்தை பார்வையிடவும் அல்லது நிப்ட் சென்னையை தொடர்பு கொள்ளவும்.